கவிழும் கர்நாடகா அரசு: விலகும் எம்எல்ஏக்கள்

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement

பெங்களூரு: குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்., மற்றும் மஜத எம்எல்ஏ.,க்கள் 12 பேர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இம்மாநிலத்தில் காங்., ஆட்சி கலையும் என்ற சூழல் எழுந்துள்ளது.



latest tamil news



கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக காங் - மஜத கூட்டணி அமைக்கப்பட்டது. இருந்தும் தேர்தலுக்கு பிறகு ஓராண்டாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதல்வர் குமாரசாமி, காங்., எங்களை செயல்படவிடாமல் கட்டுப்படுத்த பார்க்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசை செயலற்றதாக்க திட்டமிட்டுள்ளன. கூட்டணி அரசு நடத்துவது விஷத்தை விழுங்கியதற்கு சமம். இதனால் தான் பதவி விலக வேண்டியது இருக்கும் என கூறியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில் இன்று (6ம் தேதி) மதியம் காங்கிரஸ் தரப்பில் 9, மஜத தரப்பில்3 எம்எல்ஏ.,க்கள் சட்டசபை வளாகத்திற்கு வந்துள்ளனர். சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சபாநாயகர் அலுவலகத்தில் இல்லை. இதனால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் எடியூரப்பா, லோக்சபா தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
07-ஜூலை-201901:45:25 IST Report Abuse
C.Jeyabalan 35 MLA -களை வைத்து கொண்டு 70 MLA -களை குமாரசாமி அடக்கி ஆள முடியுமா? ஏதோ தானும் கொஞ்சகாலம் முதல் அமைச்சராக இருந்தோம் என்ற மகிழ்ச்சியில் விலகி விட வேண்டியதுதானே அல்லது, இருக்கிற ஒவ்வொரு MLA -களுக்கும் மந்திரி பதவி கொடுத்து விட்டால் எவருமே மறுதேர்தல் வரும்வரை எங்கும் செல்ல மாட்டார்கள் 200 பேர் கொண்ட சடடசபையில் 105 மந்திரிகள் இந்த "சாதனையை" யாரும் எளிதில் வீழ்த்தமுடியாது
Rate this:
Cancel
Jeya Veera Pandian - madurai,இந்தியா
06-ஜூலை-201923:12:08 IST Report Abuse
Jeya Veera Pandian அங்கும் ஒரு கருணா கூட்டம்
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
06-ஜூலை-201921:37:00 IST Report Abuse
Subramanian Arunachalam வெறும் முப்பத்தியெட்டு எம் எல் எ க்களை வைத்து கொண்டு திரு குமாரசாமியும் அவரது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களும் செய்யும் அளப்பறைகளுக்கு அளவே இல்லை . இதில் குமாரசுவாமி ஏதோ அவருக்கு தனிப்பட்ட பெரும்பான்மை உள்ளது போல் அலட்டி கொள்கிறார் . முடிந்த வரையில் சுருட்டும் வேலையில் அவரும் அவரது குடும்ப உறுபின்னர்களும் ஈடுபட்டு உள்ளனர் . அவருக்கு சுய நினைவு திரும்பும்போது , அவர் சொல்வது நாங்கள் மத சார்பற்ற அரசியல் செய்வோம் மற்றும் நாங்கள் விவசாய பரம்பரை . அந்த குடும்பத்திற்கும் விவசாயத்திற்கும் உள்ள தொடர்பு , அவர்களால் முடிந்த மட்டும் உணவு தானியங்களை விழுங்கி ஏப்பம் விடுவது தான் . கர்நாடக மக்கள் எப்போது இந்த கௌடா குடும்பத்தை குப்பையில் போடுகிறார்களா அன்று தான் அவர்களுக்கு விடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X