ராகுல் பாத யாத்திரை: பிரியங்கா பிரதமர் வேட்பாளர்?

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் ராகுலை பாதயாத்திரை செல்ல வைப்பது; பிரியங்காவை அடுத்த பிரதமராக அறிவிப்பது - இவை தான் 2024 பொதுத்தேர்தலுக்காக காங்., வைத்திருக்கும் ரகசிய திட்டம்.



latest tamil news


கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கும் குஜராத்தில் இருந்து அசாமுக்கும் இடையே பெரும்பாலான மாநிலங்கள் வழியே செல்லும் வகையில் ராகுலின் பாதயாத்திரை திட்டமிடப்படும் என தெரிகிறது.
ராகுலுக்கு பிறகு கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்த பின்பு தான் பாத யாத்திரை பற்றி முடிவெடுக்கப்படும். இதன் பிறகு 2024 தேர்தலுக்கு முன் பிரதமராக பிரியங்கா அறிவிக்கப்படலாம்.


latest tamil news



பாத யாத்திரை:


முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பாத யாத்திரை சென்றார். 1983, ஜனவரி 6ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட அவர், ஜூன் 25ம் தேதி யாத்திரையை ராஜ்காட்டில் காந்தி சமாதியில் முடித்தார். அவர் பாத யாத்திரை சென்ற துாரம் 4260 கி.மீ., இளைஞர்களை குறி வைத்து தான் அவர் பாத யாத்திரை.
அதே போல் ராகுலும் 90 அல்லது 180 நாட்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும்; நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்பது தான் திட்டம்.


latest tamil news



அடுத்த தலைவர் யார்:

அதற்கு முன் கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராகுல். இந்த பட்டியலில் முதல் பெயராக அசோக் கெலாட் பெயர் இருக்கிறது. ஆனாலும், பிரியங்காவும் சோனியாவும் இந்த விஷயத்தில் இன்னமும் முடிவு செய்யாமல் இருக்கின்றனர்.
காமராஜ் திட்டத்தின் பாணியில் கட்சி தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்ததும், மற்ற தலைவர்களும் ராஜினாமா செய்வர் என்று ராகுல் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. முக்கியமாக ஐந்து காங்., முதல்வர்கள், இதைப் பற்றி கவலையே படவில்லை. இது ராகுலுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
இது பற்றி கருத்து தெரிவித்த பஞ்சாப் காங்., முதல்வர் அமரீந்தர் சிங், ‛‛ராகுல் ராஜினாமா செய்தது துரதிருஷ்டவசமானது. புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டால் அவர், நாடு முழுவதும் அறியப்பட்ட இளைய தலைமுறை தலைவராக இருக்க வேண்டும்'' என்றார்.
புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பதவி ஏதும் வகிக்காத ‛சுப்ரீம்' தலைவராக ராகுல் செயல்படுவார் என்று கட்சியில் சில மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
11-ஜூலை-201909:47:04 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கார்கிலைதான் பெஸ்ட் தலைமைக்கு ஆனால் அவரை சோனியாக்கு பிடிக்காதே
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
11-ஜூலை-201908:20:11 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> உடைமாபாவது இலைக்கு நடக்கட்டும் தப்பே இல்லீங்க இந்திரப்பேரன் என்றால் நமக்கேனுங்க ஆச்சு அரசிய்லநாகரீகங்கள் ளத்தெரியாது பீ எம் ஐகேவலமா பேசுவான் அவன் ஏசினால் அவன் அம்மா அக்கா தான் ரசிப்பாங்க நாட் பொதுமக்கள் கூடவெப்பிரியங்காவும் அவக்குழந்தைகள் என்ன டூன் ஸ்கூல் வுட்டாச்சா புருஷன் எங்கிட்டோ போறான் பொண்டாட்டி இவை அரசியலுக்கு வந்துட்டா நேருவாத்து வமிசமாச்சு அதையே வச்சுண்டு மேலும் கொடிகள் சேர்க்கவே ப்லான்போல இருக்கே
Rate this:
Cancel
06-ஜூலை-201922:18:07 IST Report Abuse
நக்கல் செருப்பு, போட்டுக்கப்போறீங்களா இல்ல ஷூவா...தலையால நடந்து தண்ணி குடிச்சாலும் 2024ல பிஜேபிதான் வரும்...உங்கள் ராஜ்யம் முடிவுற்றது... கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழர வழிய பாருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X