ராகுல் பாத யாத்திரை: பிரியங்கா பிரதமர் வேட்பாளர்? | Dinamalar

ராகுல் பாத யாத்திரை: பிரியங்கா பிரதமர் வேட்பாளர்?

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (24)
Share

புதுடில்லி: நாடு முழுவதும் ராகுலை பாதயாத்திரை செல்ல வைப்பது; பிரியங்காவை அடுத்த பிரதமராக அறிவிப்பது - இவை தான் 2024 பொதுத்தேர்தலுக்காக காங்., வைத்திருக்கும் ரகசிய திட்டம்.



latest tamil news


கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கும் குஜராத்தில் இருந்து அசாமுக்கும் இடையே பெரும்பாலான மாநிலங்கள் வழியே செல்லும் வகையில் ராகுலின் பாதயாத்திரை திட்டமிடப்படும் என தெரிகிறது.
ராகுலுக்கு பிறகு கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்த பின்பு தான் பாத யாத்திரை பற்றி முடிவெடுக்கப்படும். இதன் பிறகு 2024 தேர்தலுக்கு முன் பிரதமராக பிரியங்கா அறிவிக்கப்படலாம்.


latest tamil news



பாத யாத்திரை:


முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பாத யாத்திரை சென்றார். 1983, ஜனவரி 6ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட அவர், ஜூன் 25ம் தேதி யாத்திரையை ராஜ்காட்டில் காந்தி சமாதியில் முடித்தார். அவர் பாத யாத்திரை சென்ற துாரம் 4260 கி.மீ., இளைஞர்களை குறி வைத்து தான் அவர் பாத யாத்திரை.
அதே போல் ராகுலும் 90 அல்லது 180 நாட்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும்; நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்பது தான் திட்டம்.


latest tamil news



அடுத்த தலைவர் யார்:

அதற்கு முன் கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராகுல். இந்த பட்டியலில் முதல் பெயராக அசோக் கெலாட் பெயர் இருக்கிறது. ஆனாலும், பிரியங்காவும் சோனியாவும் இந்த விஷயத்தில் இன்னமும் முடிவு செய்யாமல் இருக்கின்றனர்.
காமராஜ் திட்டத்தின் பாணியில் கட்சி தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்ததும், மற்ற தலைவர்களும் ராஜினாமா செய்வர் என்று ராகுல் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. முக்கியமாக ஐந்து காங்., முதல்வர்கள், இதைப் பற்றி கவலையே படவில்லை. இது ராகுலுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
இது பற்றி கருத்து தெரிவித்த பஞ்சாப் காங்., முதல்வர் அமரீந்தர் சிங், ‛‛ராகுல் ராஜினாமா செய்தது துரதிருஷ்டவசமானது. புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டால் அவர், நாடு முழுவதும் அறியப்பட்ட இளைய தலைமுறை தலைவராக இருக்க வேண்டும்'' என்றார்.
புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பதவி ஏதும் வகிக்காத ‛சுப்ரீம்' தலைவராக ராகுல் செயல்படுவார் என்று கட்சியில் சில மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X