பாப்கார்ன் கொறித்தார்... படத்தை ரசித்தார்! | Dinamalar

பாப்கார்ன் கொறித்தார்... படத்தை ரசித்தார்!

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (28)
Share

புதுடில்லி : காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல், அரசியல் பரபரப்பை ஓரங்கட்டிவிட்டு, டில்லி தியேட்டரில் 'பாப்கார்ன்' சாப்பிட்டு ஜாலியாக சினிமா பார்த்த வீடியோ, வைரலாகி வருகிறது.



latest tamil news


லோக்சபா தேர்தல் தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியை, கடந்த 3 ம் தேதி ராகுல் ராஜினாமா செய்தார். அதுவரை அவர் பதவி விலகுவது குறித்து உறுதியாகாமல் இருந்தது. கடந்த ஒரு மாதமாக, 'ஏதோ மிரட்டல் விடுக்கிறார்' என, நினைத்த கட்சி நிர்வாகிகள், அவர் ராஜினாமா கடிதம் கொடுத்து, நீண்ட விளக்கம் அளித்த பின், அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது வேறுவழியின்றி, புதிய தலைவரை தேடுவதில் பரபரப்பாகி உள்ளனர். ஆனால், இதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளாத ராகுல், 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்பது போல், படு ரிலாக்சாக காணப்படுகிறார்.


latest tamil news


டில்லியின் அரசியல் பரபரப்புகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, கடந்த 3ம் தேதி பொதுமக்களில் ஒருவராக டில்லி பி.வி.ஆர்.சாணக்யா தியேட்டரில், 'ஆர்டிக்கிள் 15' என்ற படத்தை ரசித்து பார்த்துள்ளார்.
கையில், பாப்கார்ன் பாக்கெட்டை வைத்து கொறித்தவாறே, அருகில் இருப்பவருடன் விவாதித்து, அவர் படத்தை ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அரசியல் பந்தா எதுவும் இல்லாமல், பொதுமக்களுடன் இணைந்து, கடைக்கோடி ரசிகர்களில் ஒருவராக ராகுல் படம் பார்த்ததை, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X