சோதனைச்சாவடியில் பா.ஜ. எம்.பி. அடாவடி

Updated : ஜூலை 07, 2019 | Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement
சோதனைச்சாவடியில் பா.ஜ. எம்.பி. அடாவடி


ஆக்ரா: உ.பி.யில் சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்களிடம் பா.ஜ. எம்.பி. துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எடாவா தொகுதி பா.ஜ. மூத்த எம்.பி. ராம்சங்கர் கதேஹரியா, இவர் உ.பி. மாநிலம் எடாவாவில் இருந்து புதுடில்லிக்கு ஒரு சொகுசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் 4 கார்களும் சென்றன.


latest tamil news


ரஹன்கலா என்றஇடத்தில் சோதனைச்சாவடி வந்த போது அங்கிருந்த ஊழியர்கள் சொகுசு பஸ்சுக்கு சுங்க கட்டணம் செலுத்தும்படி கூறினர். எங்களிடமே சுங்க கட்டணம் கேட்பதா என ஆவேசப்பட்ட எம்.பி.யின் பாதுகாவலர்கள் சுங்க கட்டண மையத்தின் ஊழியர்களை தாக்கினார்கள். இதில் 5 ஊழியர்கள் காயமடைந்தனர். பின்னர் எம்.பி. ராம்சங்கர், தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை மிரட்டியதுடன் வானத்தை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஜூலை-201916:04:45 IST Report Abuse
Endrum Indian அவன் பி .ஜெ .பியோ காங்கிரஸோ போட்டுத்தள்ளுங்க அப்போ தான் அடங்கும் இதெல்லாம்???அமைதி காத்தால் இது தொடர்கதையாக இருக்கும்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
07-ஜூலை-201912:12:40 IST Report Abuse
தாண்டவக்கோன் அடாவடி செஞ்சிதான ஆட்சிய பறிச்சானுங்க
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
07-ஜூலை-201912:09:56 IST Report Abuse
தாண்டவக்கோன் அவன் சொல்றததான் இந்த MP ங்க செய்யிவானுவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X