சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலியே பயிரை மேய்ந்த பரிதாபம்.. வேதியியல் ஆய்வகத்தில் மாணவி பலாத்காரம் உதவி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (25)
Advertisement
 வேலியே பயிரை மேய்ந்த பரிதாபம்.. வேதியியல் ஆய்வகத்தில் மாணவி பலாத்காரம் உதவி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்'

சேலம்:பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய, அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர், பாலாஜி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர்.பள்ளியில், வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் பாலாஜி, 42; உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவரின் பெற்றோர், சமீபத்தில், தலைமை ஆசிரியரை சந்தித்து, புகார் ஒன்றை தெரிவித்தனர்.
அதில், பிப்ரவரியில், பாலாஜி, வேதியியல் ஆய்வகத்தில், மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால், மாணவி தற்போது, கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.புகார் கிளம்பியதும், மருத்துவ விடுப்பில் சென்ற பாலாஜி, தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, தலைமை ஆசிரியர், அமுதா, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.அதனடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, பாலாஜியை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒழுக்கம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தலைமை ஆசிரியர், பெரும்பாலான நாட்கள், பள்ளிக்கு வருவதில்லை. அதனால் பாலாஜி தான், அனைத்துக்கும் பொறுப்பு என்பது போல், அதிகாரம் செலுத்தி வந்தான்.வளாகத்தில், ஆசிரியர்கள் சேர்ந்து, மது அருந்துவது, காதல் விவகாரங்களை கண்டுகொள்ளாமல் விடுவது என, பள்ளியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.இதில், வேலியே பயிரை மேய்வது போல, உதவி தலைமை ஆசிரியர், தன்னிடம் படிக்கும் மாணவியை, பலாத்காரம் செய்துள்ளான். இதற்கு பின்பும், எங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு எப்படி அனுப்ப முடியும்?இவ்வாறு, அவர்கள் கூறினர்.பாலியல் புகாரில் சிக்கியுள்ள, வேதியியல் ஆசிரியர், பாலாஜி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். பள்ளி மீதான புகார்களுக்கு, உரிய ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.கணேஷ்மூர்த்தி,முதன்மைக்கல்வி அலுவலர்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
09-ஜூலை-201916:57:51 IST Report Abuse
Tamilachi சஸ்பென்ஷனா....ஏன் வேலையை விட்டு தூக்க கூடாது...அவன் கொஞ்ச நாள் ரெஸ்டில் இருந்து விட்டு மறுபடியும் பள்ளிக்கு கையை வீசிக்கொண்டு வருவான்...அப்புறம் எப்படி பயம் இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201911:48:38 IST Report Abuse
TAMILAN இந்த வந்தேறிகளை நம் மாநிலத்தை விட்டு விரட்டினால் எல்லாம் சரியாகும்.
Rate this:
Share this comment
Jayvee - chennai,இந்தியா
09-ஜூலை-201913:16:16 IST Report Abuse
Jayveeதமிழன்.. இவன் ஜாதி உங்களக்கு மட்டும் எப்படி தெரிந்தது.. ? நீங்களும் அமெரிக்காவில் வந்தேறிதான்.. ட்ரம்ப் திருப்பி அடித்தால் இங்குதான் வரவேண்டும்.....
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
10-ஜூலை-201910:46:12 IST Report Abuse
DSM .S/o PLM எந்தஒரு வெளிநாட்டிலும் போய் வேலை செய்பவனுக்கு இருக்கும் பரந்த உள்ளம், விசாலமான சிந்தனை இருந்தால் , இவன் அடுத்தவனை வந்தேறி என்று சொல்வானா.....
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
10-ஜூலை-201910:47:32 IST Report Abuse
DSM .S/o PLM இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வந்தவன் எல்லோரும் இப்படித்தான் இருப்பான். என்ன செய்ய... தலையெழுத்து....
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
10-ஜூலை-201911:11:47 IST Report Abuse
JIVANஇனி புது இட ஒதுக்கீட்டுல வரவேணும் அப்படித்தானே இருப்பான்....
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
10-ஜூலை-201916:12:04 IST Report Abuse
TamilArasanபாலாஜி என்றால் வந்தேறி.... மொஹம்மத், கிருத்து என்று பேர் வைத்துள்ளவன் எல்லாம் என்ன சொந்தேறியா...? மூடனே பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை 10 பேர் சேர்ந்து சீரழித்துள்ளார்கள் அத்தனை பன்றிகள் பேரை தேடி பார்... மேலும் தமிழகத்தில் எத்தனை பாவாடைகள் வெள்ளை அங்கிக்குள் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்கள் காரணமாய் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பார்......
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
11-ஜூலை-201906:52:10 IST Report Abuse
Anandanஜாதி பெயரை போட்டுகிறவனுக்கு எப்படி பரந்த மனசு இருக்கும்?...
Rate this:
Share this comment
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201902:37:33 IST Report Abuse
TAMILANநாங்கள் பரந்த உள்ளம் கொண்டவர்கள் அதனால் தான் உங்களை எங்கள் நாட்டில் இருந்த துக்கொண்டு எங்களையே பேச அனுமதிக்கின்றோம். நான் சொல்லுவது பொய் இல்லை. ஜஸ்வந்த் என்பவன் சென்னையில் 3 வயது சிறுமியை சீரழித்தான், அவன் என்ன தமிழனா...., பொள்ளாச்சியில் அதனை கொடுமைகள் செய்தவர்கள் தமிழனா..இல்லை. இப்படி ஒவ்வொரு பிரச்னையும் வருவது இங்கு வாழ வந்து நம்மால் வாழவைக்கப்பட்டவர்களே. இங்கு கமெண்டுகளில் தமிழர்களை திட்டுபவர்களும் தங்களுக்குள் ஒருத்தர் என்று தமிழர்களால் வாழவைக்கப்பட்டவர்கள்....
Rate this:
Share this comment
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201902:43:49 IST Report Abuse
TAMILANJayvee அவர்களே உங்களை போன்றோர் தமிழ் நாட்டிற்கு வந்து கருணாநிதியால் எங்கள் வேலைவாய்ப்பை தட்டி பறித்தால் தான் நங்கள் சொந்தங்களை விட்டு நாடு விட்டு நாடு போய் வெளிநாட்டில் வேலை செய்கின்றோம். அவர்கள் இடத்தை பிடித்துக்கொண்டு அமெரிக்கர்களாக நடித்து அவர்களை திருப்பி அடிக்கவில்லை உங்களை போல். எங்களை போல் தமிழர் என்றே இங்கு அடையாளப்படுத்துகின்றோம். உங்களை போல் தமிழர்களாக நடிக்கவில்லை....
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
08-ஜூலை-201922:27:38 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இந்த செய்தி அல்லது சம்பவம் நம்பும்படி இல்லை. சேலம் போன்ற பெரிய ஊர்களில் DEO CEO கண்கணிப்பு அதிகம் இருக்கும். அப்படியே தவறு நடக்கும் பட்சத்தில் செய்தி விரைவாக DEO CEO -வை எட்டிவிடும். விடுதி உள்ள இடம் என்பதால் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஆசிரியர் தவறுவது, மிக மிக தண்டனைக்கு உரிய குற்றம். தவறு நிரூபணமாகும் பட்சத்தில், வேலை பறிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X