சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டு பாலியல் பலாத்காரம்: பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்

Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (35)
Advertisement
 கூட்டு பாலியல் பலாத்காரம்:  பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 16 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த, ஒன்பது பேரை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சில மாதங்களுக்கு முன், பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, 'வீடியோ' எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம், மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சியில், 16 வயது சிறுமியை, ஒரு கும்பல், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஷெரிப் காலனியைச் சேர்ந்தவன், அமானுல்லா, 25. இவன், 16 வயது சிறுமியை காதலிப்பது போல நடித்துள்ளான். கடந்த, 4ம் தேதி, அந்த சிறுமியை, பொள்ளாச்சி அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், அவனது நண்பர்கள், ஒன்பது பேர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அமானுல்லாவும் உடந்தையாக இருந்துள்ளான்.விசாரணைஇதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, ஏ.டி.எஸ்.பி., அனிதா மற்றும் டி.எஸ்.பி.,க்கள் செந்தில்குமார், விவேகானந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், மகளிர் போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர், விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கில் தொடர்புடைய, அமானுல்லா, பகவதி, 26, முகம்மது அலி, 28, டேவிட் செந்தில், 30, முகமது ரபீக், 28, அருண்நேரு, 28, சையத் முகமது, 25, இர்ஷாத் முகமது, 28, இர்ஷாத் பாஷா, 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தலைமறைவாகியுள்ள, திண்டுக்கல்லைச் சேர்ந்த, பிரபு என்பவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கு குறித்து, போலீசார் கூறியதாவது:பொள்ளாச்சியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, அமானுல்லா காதலிப்பது போல நடித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அந்த விஷயத்தை, தன் நண்பர்களிடம் கூறியுள்ளான்.இதையடுத்து அவர்கள், அந்த சிறுமியை மிரட்டி, சில மாதங்களாக, தொடர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.'போக்சோ'இது குறித்து, தன் பெற்றோரிடம், அந்த சிறுமி கூறியுள்ளார். அமானுல்லாவிடம் விசாரணை நடத்தியதில், அவன் உட்பட, 10 பேர், சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது, தெரிய வந்தது.பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Paris,பிரான்ஸ்
12-ஜூலை-201920:01:16 IST Report Abuse
Raja ஏன் இந்த பொறுக்கிகள் முகத்தை மூடி மறைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
12-ஜூலை-201913:51:55 IST Report Abuse
Sanjay போக்ஸோ சட்டம் திருத்தப்பட்டது, இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
12-ஜூலை-201912:26:49 IST Report Abuse
தாமரை இந்த விவகாரத்தில் பல பாய்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் நம்ம ஊரு 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் கண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X