ஜெய்சங்கருடன் தி.மு.க., பேச்சு?

Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement

லோக்சபா நடவடிக்கைகள், தினமும் காலை, 11:௦௦ மணிக்கு துவங்கும். எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள், 10:45க்கே சபைக்கு வந்துவிடுவர்.சமீபத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சபையில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, தி.மு.க.,வின் சீனியர், எம்.பி.,க்கள் நான்கு பேர், அவர் அருகே வந்தனர்.
வந்தவர்கள், ஜெய்சங்கரிடம் ஏதோ கேட்க, அவரும் சீரியசாக பதில் அளித்தார். மற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள், அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பது புரியாமல், திகைத்தபடி பார்த்தனர்.நான்கு எம்.பி.,க்களும், ஜெய்சங்கரிடம், அவருடைய மொபைல் நம்பரைக் கேட்டனர்.

அவர் கொடுத்த உடனேயே, நால்வரும் ஜெய்சங்கர் நம்பருக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தனர்.சபை துவங்கும் நேரம் நெருங்கிய உடன், இந்த நால்வர் கோஷ்டி, ஜெய்சங்கரிடம் விடை பெற்று தங்கள் இருக்கைக்கு வந்தது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், ஜெய்சங்கர். அவர் மூலமாக, அந்த தி.மு.க., - எம்.பி.,க்கள், மோடிக்கு ஏதாவது தகவல் அனுப்புகின்றனரோ என, மற்ற எம்.பி.,க்கள் சந்தேகம் அடைந்தனர். விஷயம் விரைவில் தெரிய வரும்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
07-ஜூலை-201920:25:37 IST Report Abuse
Dr.T.Senthilsigamani நடிகர் ஜெய்சங்கர் கருணாநிதிக்காக திரையுலகில் எம்ஜியாரை எதிர்த்து நின்று பல இன்னல்களை அனுபவித்தார் .ஆனால் மறைந்த கருணாநிதி நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை .இது அனைவரும் அறிந்த உண்மை .இப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உதவியை திமுக நாடுவது காலத்தின் கட்டாயம் . நடிகர் ஜெய் சங்கர் திமுக தலைவரிடம் ஏமாந்தது போல அமைச்சர் ஜெய்சங்கர் திமுக எம்பிக்களிடம் ஏமாந்து விடக்கூடாது .
Rate this:
Cancel
07-ஜூலை-201918:15:50 IST Report Abuse
நக்கல் தீயமுக கும்பல் காத்து கருப்புங்க, பக்கதுலையே சேக்கக்கூடாது...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-201916:58:36 IST Report Abuse
J.V. Iyer கனிமொழி, மாறன் எங்களை சிறைக்கு அனுப்பாதீர்கள் என்று வேண்டிக்கொண்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X