மே.வங்கத்திற்கு கிரண்பேடி மாற்றம்?

Updated : ஜூலை 07, 2019 | Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (69)
Advertisement
மே.வங்கத்திற்கு கிரண்பேடி மாற்றம்?

தி.மு.க., - -பா.ஜ., தொடர்பான இன்னொரு விஷயமும், விரைவில் நடக்கவிருக்கிறது. புதுச்சேரி கவர்னர், கிரண் பேடி, தமிழக அரசியல்வாதிகள் பற்றி, 'டுவிட்' செய்த விஷயம், பெரும் சர்ச்சையை கிளப்பியது.தி.மு.க., --- எம்.பி.,க்கள், இந்த விவகாரத்தை லோக்சபாவில் எழுப்பினர். இதையடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண் பேடியிடம் பேச, அவரும் அந்த டுவிட்டை நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்தார்.





இதில், தி.மு.க., - எம்.பி.,க்கள், திருப்தி அடையாத நிலையில், கிரண் பேடியை, வேறு மாநிலத்திற்கு கவர்னராக நியமிக்க ஆலோசனை நடக்கிறதாம். மம்தா பானர்ஜி, முதல்வராக இருக்கும் மேற்கு வங்கத்தில், இப்போதைய கவர்னர், கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு, கிரண் பேடி நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு, சரியான ஜோடி, கிரண் பேடி என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.


Advertisement


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
13-ஜூலை-201906:19:53 IST Report Abuse
oce நாராயணசாமிக்கு எப்போதும் ஒரு செக் தேவை. கிரண்பேடியை புதுவை கவர்னர் பதவியிலிருந்து மாற்றக்கூடாது. அப்படி மாற்றும் அவசியமிருந்தால் டாக்டர் சுப்ரமணிய சாமியை புதுவை கவர்னராக நியமிக்கலாம். நாராயணசாமிக்கு தலைவலி போய் திருகு வலி வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
13-ஜூலை-201906:16:31 IST Report Abuse
oce சம்பாதிக்க ஆட்சிக்கு வந்தால் கிரண்பேடி குறுக்கே நிற்கிறார். என்ன செய்வது.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
13-ஜூலை-201906:15:04 IST Report Abuse
oce சில மாநிலங்களில் கவர்னர் பதவியை பப்பட் ஜமால் கடை பொம்மை போல் வைத்திருக்கிறார்கள். மக்களால்தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் பவிஷை கவனிப்பது தான் கவர்னர் வேலை. ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி இருந்தால் முதல்வரை கேள்வி கேட்கும் அதிகாரம் கவர்னருக்குள்ளது. மீறினால் ஆட்சியையும் அவர் கலைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X