சினிமாவில் சான்ஸ் கிடைத்தது முதல் பட்டைய கிளப்பும் டான்ஸ்... ஆடுகளத்தில் இறங்கி கவர்ச்சியில் கலக்கும் கிளர்ச்சி... அழகிய அசைவுகளால் ஆசையை துாண்டும் துாண்டில், நீ பார்த்தாலே இளசுகள் எல்லாம் உன் இதயக் கூண்டில், பெண்மை என்னும் மென்மை பூசிய பீட்சா, தரமான திறமையால் ரசிகர்களிடம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரீச் ஆன ரிச் டான்ஸர், நடிகை ரிஷா மனம் திறக்கிறார்...
* சிங்கிள் சாங் டான்ஸராக எப்படி ?என் அம்மா வத்சலா எம்.ஜி.ஆர்., காலத்தில் குரூப் டான்ஸராக இருந்தாங்க. அம்மாவுக்கு பின் 15 வயதில் 'யுகா' என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையானேன். வத்சலா பொண்ணு என்ற அடையாளம் இருந்ததால் நானும் டான்ஸராகி விட்டேன்.
*அடையாளம் காட்டிய படம், பாடல் ?'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'ல் 'ஆரவல்லி சூரவள்ளி' அப்புறம் 'சரவணன் இருக்க பயமேன்'ல் 'லாலா கடை சாந்தி' பாடல்கள் நீண்ட இடைவெளிக்கு பின் பெரியளவில் அடையாளம் காட்டிய படங்கள், பாடல்கள்.
* டான்ஸ் மட்டும் தானா நடிக்கும் ஐடியா?இல்லை 'கருப்பன்'ல் நடிச்சிருக்கேன்... இப்போ பூபதி இயக்கும் 'அசால்ட்' என்ற காமெடி கலந்த ரவுடியிசம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன்.
* ஹீரோயின்களும் ஒரு பாட்டுக்கு ஆடுறாங்களே ?முன்னாடி எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடுறதுக்காகவே டான்ஸர்கள் இருந்தாங்க. இப்போ டான்ஸ், நடிப்புக்கு போட்டி அதிகம், அதான் ஹீரோயின்கள் ஒரு பாட்டுக்கு ஆட வராங்க. நான் கூட ரொம்ப வருஷமா 'சோலோ' டான்ஸரா இருந்துட்டேன்... அதனால் இனி நடிப்பில் கவனம் செலுத்தப் போறேன்.
* டான்ஸில் உங்கள் ரோல் மாடல் யார் ?அம்மா வத்சலா, பிரபுதேவா, பாப் சிங்கர் ஜெனிபர் லோபஸ்... இவங்களை மாதிரி டான்ஸில் ஒரு கலக்கு கலக்கனும்னு தான் ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடிகிட்டு இருக்கேன்.
* ஒரு டான்ஸர் தெரிந்திருக்க வேண்டியது ?நடிகருக்கு டான்ஸ் தெரிஞ்சிருக்கனும்னு அவசியம் இல்லை, டான்ஸ் மாஸ்டர் கற்றுக் கொடுத்தால் ஆடிடலாம். ஆனால், ஒரு டான்ஸருக்கு கண்டிப்பா நடிக்க தெரிஞ்சிருக்கனும். அப்போ தான் ஆடும் போது பாடல் வரிகளுக்கு ஏற்ப 'பாடி லாங்குவேஜ்', 'பேஸ் எக்ஸ்பிரஷன்' கொடுக்க முடியும்.
* ஏன் டிவி ரியாலிட்டி ஷோ பக்கம் வந்தீங்க ?நான் எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பதால் ரசிகர்களிடம் ஈஸியா ரீச் ஆயிட்டேன். ரியாலிட்டி ஷோவில் பிளஸ், மைனஸ் இருக்கு... சினிமா, டிவி இந்த ரெண்டில் எது பிடிக்கும்னு கேட்டால் 'ஐ லவ் சினிமா'ன்னு தான் செல்லுவேன்.
* 'கிளாமர் ரிஷா' இந்த பட்டம் பிடிச்சிருக்கா ?பாட்டுக்கு கிளாமர் தேவை அதனால் தான் அப்படி ஆடுறேன்... நிஜத்தில் எப்பவும் நான் கிளாமரா டிரஸ் பண்ணுறதில்லை. சின்னதா டிரஸ் போட்டு ஆடினால் தப்பான ஆளுன்னு நிறைய பேர் நினைக்குறாங்க...
நான் உட்பட என்னை மாதிரி பெண் டான்ஸர்களும் சராசரி பெண்கள் தான் என்று, அப்படி நினைப்பவர்களுக்கு புரிய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE