இன்னிசையும் இசைந்தாடும் குரல் கேட்டால்... வீணைகளும் விரைந்தோடும் விரல் பார்த்தால்... பூ முகம் பார்த்து பூக்களும் புல்லாங்குழல் இசைக்கும், கண்ணசைவில் மனம் மயக்கும் மெல்லிசை பிறக்கும் என, கவிபாடும் இசை திறமையால் பதினாறு ராகங்களில் அபூர்வ ராகமாக ஜொலிக்கும் பின்னணி பாடகி அனு மனம் திறக்கிறார்...
* இசை முகத்தின் அறிமுகம்?என் பூர்வீகம் கேரளா, பிறந்தது மன்னார்குடி... இப்போ இருக்குறது சென்னை பி.எஸ்சி., படிக்கிறேன். வரதாச்சாரி, பின்னி கிருஷ்ணகுமார், சியாமளா ஆகியோரிடம் இசை கற்றேன்.
* இசை துறைக்கு வந்தது எப்படி சின்ன வயதிலேயே இசை, பாடலின் மேல் அதிக ஆர்வம் இருந்தது. அப்பா ஆனந்த்துக்கு இசையில் ஆர்வம் உண்டு, அம்மா பாத்திமா பாடுவாங்க. அதனால், 'டிவி' பாடல் போட்டி நிகழ்ச்சியில் பாடினேன். அதற்கு பின் சினிமாவில் பாட பல வாய்ப்புகள் வந்தன.
* பாடல் போட்டியில் வெற்றி?என்னை பொறுத்தவரை 'டிவி' பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதே பெரிய வெற்றி தான். என்னால் முடிந்தளவு என் பாடல் திறமையை நிரூபித்து டாப் 5 இடத்தை பிடித்தேன். இதன் மூலம் இசையில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. * சினிமாவில் பாடிய பாடல்கள்?'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் 'எனக்காக பிறந்தாயே', 'புதியதோர் உலகம் செய்வோம்' படத்தில் 'இசையில் வசமான', தெலுங்கில் 'கனம்' படத்தில் 'சஞ்சாலி' பாடல்கள் பாடி இருக்கேன்.
* பாட்டு மட்டும் தானா நடிப்பு?இல்லை நான் பின்னணி பாடிய 'புதியதோர் உலகம் செய்வோம்' படத்தில் அபி என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன். அப்புறம் யூடியூப்பில் நிறைய ஆல்பம் சாங் பாடியிருக்கேன், குறும்படங்களிலும் நடிக்கிறேன். சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கு.
* உங்களை கவர்ந்த பாடகர்கள்?ஸ்வேதா, பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், சீனிவாசன்... இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு.
* இசையில் சாதிக்க விரும்புவது எனக்கு மியூசிக் தான் எல்லாம்... எப்போதும் ஏதாவது ஒரு பாடலை பாடிகிட்டே இருப்பேன். இசையில் நான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுகிட்டு இருக்கேன்.
* ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் வெளியே போகும் போது 'நீங்க சிங்கர் அனுதானே'ன்னு நிறைய பேர் கேட்குறப்போ சந்தோஷமாக இருக்கு. வெளிநாட்டு பாடல் நிகழ்ச்சிக்கு சென்ற போது ஒரு ரசிகை மோதிரம் எல்லாம் கொடுத்து பாராட்டினாங்க.anjalibikepoint@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE