குமாரசாமி நாளை ராஜினாமா?

Updated : ஜூலை 07, 2019 | Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (30)
Advertisement

பெங்களூரு : கர்நாடகத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் குமாரசாமி மக்களிடம் அனுதாபத்தை பெறும் வகையில் நாளை (ஜூலை 8) ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.





கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு, கவிழும் நிலை உருவாகியுள்ளது.


சொகுசு விடுதி :

அதிருப்தியாளர் எம்.எல்.ஏக்கள் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை பெங்களூர் ராஜ்பவனில் சந்தித்து அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.ஆயினும் ராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு சென்று அங்கு அவர்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.





அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்;

அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ்-மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், 13 எம்.எல்.ஏக்களுடன், ஏற்கனவே ராஜினாமா செய்த ஆனந்த்சிங்குடன் சேர்த்து 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைவதால், ஆளும் கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் குறைந்துவிடும்.
பா.ஜ., 105 இடங்கள் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.,வுக்கும் சமபலம் உருவாகும். தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பா.ஜ.,வை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கலாம்.





முதல்வர் ராஜினாமா?

வரும் 12ம் தேதி சட்டசபை கூடும் நிலையில் பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனிடையே தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூர் திரும்ப உள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஆட்சி கவிழும் முன்பே, அனுதாபத்தைப்பெற ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay - Bhavani,இந்தியா
11-ஜூலை-201922:45:35 IST Report Abuse
Jay இது ஒன்னும் பிஜேபி செய்யும் நாடகமாக தெரியவில்லை காங்கிரஸ் நடத்துகிறதோ என்ற ஐயம் உள்ளது. இந்த நாடகத்தின் முடிவில் காங்கிரஸ் முதலமைச்சர் வந்தால், இது காங்கிரஸ் நடத்திய நாடகமே. பிஜேபி முதலமைச்சர் வந்தால் அது பிஜேபி நடத்திய நாடகம்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜூலை-201910:13:19 IST Report Abuse
Malick Raja ஆடும் வரைதான் ஆட்டம் .. பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
09-ஜூலை-201904:29:59 IST Report Abuse
meenakshisundaram தமிழகத்துக்கு அண்டை மாநிலமாக இருப்பதால் இங்கேயும் அரசியலில் புற்று நோய் பற்றி விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X