வாய்ப்புக்காக காத்திருந்த காலங்கள் மாறி, வாய்ப்புகளை உருவாக்கி சாதனையாளர்களாக மாறுகின்றனர் இன்றைய இளைஞர்கள். சினிமாவுக்கு மட்டும் அதில் விலக்கு உண்டா என்ன. வாழ்க்கையில் பலர் நம்மை கடந்து செல்வதுண்டு. நண்பர்கள் மட்டுமே அழியாத சுவடுகளாக என்றும் நம்முடன் இருப்பர்.
'பிளாக் ஷீப்' யூ டியூப் சேனல் மூலம் பிரபலமானவருக்கு தனது நண்பர்களால் இயக்குனர் எனும் 'கிரீடம்' கிடைத்திருக்கிறது. அவர், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள கார்த்திக் வேணுகோபாலன்.
* உங்களை பற்றிசொந்த ஊர் ஈரோடு மாவட்டம். தற்போது உடுமலைபேட்டையில் வசிக்கிறோம். நான் பி.இ., எம்.பி.ஏ., பட்டதாரி. சினிமா பற்றி தெரியாது. சென்னையில் ரேடியோ ஜாக்கி விக்கி, சுட்டி அரவிந்த் பழக்கம் கிடைத்து ஆன்லைன் ரேடியோ ஜாக்கி வேலை பார்த்தேன்.
* யூ டியூப் சேனல்'பிளாக் ஷீப்' யூ டியூப் சேனலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கணக்கே இல்லாத அளவுக்கு குறும்படங்கள் வெளியிட்டுள்ளோம். திரைப்படம் மூலமாக மக்களை சந்தோஷப்படுத்தவும், ஒரு கருத்தை விதைக்கவும் முடிவு செய்தோம். அப்படி ஒன்றரை ஆண்டுகளாக உருவானது தான் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம்.
* ஹீரோவான ரியோவி.ஜே.,ரியோவிடம் நல்ல நடிப்பு திறமை இருக்கு. 'டிவி' யில் பார்த்ததற்கும், சினிமாவில் பார்ப்பதற்கும் அவர் நடிப்பில் வித்தியாசம் இருக்கும். படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே நண்பர்கள் தான்.படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று வாரங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
* தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்அவரால் தான் இந்த படமே. படத்தை பார்த்ததும் அவர் என்ன சொல்வாரோ என பயந்தேன். படம் முடிந்ததும் அழுதுவிட்டார். பிறகு 'என்னை காப்பாற்றி விட்டீர்கள். மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்', என்றார்.
* நடிகராக நாஞ்சில் சம்பத்படத்தில் அரசியல் காட்சிகள் இருப்பதால் முதலில் அவரைத் தான் தேர்வு செய்தோம். என்னால் நடிக்க முடியுமா என்று கேட்டார். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பைவிட பிரமாதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளுக்கு கைத்தட்டலுக்கு பஞ்சமில்லை.
* ஆசை நிறைவேறியதாநிச்சயமாக. அம்மா, அப்பாவுக்கு எனக்குள் இயக்குனர் இருப்பதே தெரியாது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க வைத்தேன். படத்தில் என்னுடைய பெயரை பார்த்ததும் கண்ணீர் விட்டனர்.
* மக்களுக்காககருத்து நம்ம படத்திலேயே சொல்லியிருப்போம். ஒரு தப்பு நடந்தா தட்டி கேட்கணும். தட்டி கேட்க ஒருத்தர் வரணும். அப்ப தான் தப்பு பண்றவங்களுக்கு பயம் வரும். நமக்கு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோனு பயந்து மனிதாபிமானத்தை பூட்டி வைக்க கூடாது. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா -தலைவர்' போல தைரியமாக இருக்க வேண்டும்.
இவரை வாழ்த்த nenjamundunermaiyundu@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE