தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களால் 'மக்கள் செல்வன்' என்று புகழப்படும் விஜய் சேதுபதி தன் திைரப்பயணம் குறித்து பேசுகிறார்...
* இயக்குனர் அருண் உடன் மூன்று படமும் ஏன்?இயக்குனர் அருண்குமாரின் 'பண்ணையாரும் பத்மினியும்'க்கு பின் 'சேதுபதி' கதையை பல நடிகர்களிடம் கூறினார். யாரும் நடிக்க முன்வராததால் நானே நடித்தேன். 'சிந்துபாத்' யாரும் நடிக்கவில்லை. ஒரு நல்ல படைப்பாளி வாய்ப்பு கேட்டு அலைவது வேதனையாக இருந்ததால் அருணுக்கு மீண்டும் வாய்ப்பு தந்தேன்.
* இந்த கதையில் உங்க மகன் எப்படி?'நானும் ரவுடி தான்'ல் ஏற்கனவே என் மகன் சூர்யா நடித்திருந்தார். இப்படத்தில் என் மகன் கேரக்டருக்கு அவர் தான் நடிக்க வேண்டும் என்று அந்த கேரக்டரை அவருக்காகவே எழுதியிருந்தார் அருண். நடிப்பதை என் மகன் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினேன். சிந்துபாத் படத்துக்கு சூர்யா உடனே சம்மதம் தெரிவிக்கவில்லை. போராடித் தான் இயக்குனர் நடிக்க வைத்தார்.
* உங்கள் நடிப்பு, டான்ஸ் பற்றி?நடிக்கும் போது ஒவ்வொரு முறையும் நான் சாகிறேன், அது தான் உண்மை. எனக்கு அவ்வளவாக நடிக்க வராது, நடனத்தில் ரொம்ப வீக். நாம் நடிக்கும் படத்தை அடுத்த தலைமுறையினரும் பார்ப்பார்கள், நடித்தால் ரசிப்பார்கள் என்ற பயம் உண்டு. நான் சிறந்த நடிகன் இல்லை, சிறப்பாக நடிக்க முயற்சிக்கும் நடிகன்.
* உங்க மகன் நடிக்க வந்தால் படிப்பு ?நானும் என் மகனும் மட்டும் ஒரு மாதம் படப்பிடிப்பில் இருந்தோம். யாரோ எழுதிய புத்தகத்தை மனப்பாடம் செய்து படிக்க வைப்பதை விட அவனுக்கு வாழ்க்கையே சொல்லிக் கொடுக்கிறேன், இயக்குனரை விட நான் தான் அதிகமாக படப்பிடிப்பில் திட்டியிருக்கிறேன்.
* குளக் காட்சியில் மகன் உடன் நடித்தது ?அந்த காட்சியை குற்றாலத்தில் எடுத்தோம். முதலில் குளத்தில் குதிக்க மாட்டேன் என்று சொன்னான். அந்த ஊர் பசங்க பெரிய மரத்தின் மேலிருந்து குளத்தில் குதித்தார்கள். உன் அப்பாவை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தாதே குதிச்சிடு என்று சொன்னேன். அப்புறம் தான் குதித்தான். ஆனால், அவனுக்கு நீச்சல் தெரியும்.
* ஹீரோயின் அஞ்சலி குறித்து ?காது கேட்கும் திறன் குறைந்த கேரக்டரில் நான் நடித்ததால் அஞ்சலி சத்தமாக பேசுவார். ஒவ்வொரு காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்து கலக்கினார்.
* நிறைய படங்களில் நடிப்பது எப்படி?நடிப்பு துறைக்கு நான் சமீபத்தில் தான் வந்தேன். ஆனால், 80களில் உள்ள நடிகர்கள் ஒரே நேரத்தில் ஐந்தாறு படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்கள். ஒரு வேலையை செய்யும் போது பொறுப்பு இருந்தால் போதும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE