ரிசர்வ் வங்கியில் இன்று அமைச்சர் நிர்மலா உரை

Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், இன்று, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் பேச உள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், பிப்ரவரியில், அப்போதைய, பொறுப்பு நிதியமைச்சர், பியுஷ் கோயலால், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன்,
ரிசர்வ் வங்கியில் இன்று அமைச்சர் நிர்மலா உரை

புதுடில்லி : மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், இன்று, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் பேச உள்ளார்.

நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், பிப்ரவரியில், அப்போதைய, பொறுப்பு நிதியமைச்சர், பியுஷ் கோயலால், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், கடந்த, ௫ல் தாக்கல் செய்தார். அதில், நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வகை செய்யும், பல அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக, தேசிய வீட்டு வசதி வங்கிக்குப் பதிலாக, ரிசர்வ் வங்கிக்கே, வீட்டு வசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. இது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், அவை குறித்து, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் இன்று உரையாற்றி, இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ள உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
itashokkumar - Trichy,இந்தியா
08-ஜூலை-201915:21:14 IST Report Abuse
itashokkumar உரை இல்லாத கடிதத்திற்கெல்லாம் உரை போடுவார் போலும். ஒரு நிதி அமைச்சர் செய்ய கூடிய வேலையா இது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X