சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : ஜூலை 07, 2019 | Added : ஜூலை 07, 2019 | கருத்துகள் (2)
Advertisement
'டவுட்' தனபாலு

மின்துறை அமைச்சர், தங்கமணி: மதுவிலக்கு கொள்கையில், அரசு உறுதியாக உள்ளது. மதுக் கடைகளை படிப்படியாகக்குறைப்போம். இதைப் பற்றி, யாரும் கவலைப்பட வேண்டாம்.

டவுட் தனபாலு: மது குறித்து அதிக கவலையும், கோபமும் கொண்ட கட்சி, பா.ம.க., தான்... அவர்களோ, பேசியபடி நீங்க ராஜ்யசபா, 'சீட்' ஒதுக்கிய பூரிப்பில் இருக்காங்க... 'அளவாய் குடித்தால் கெடுதல் கிடையாது'ன்னு நீங்க சொன்னபோதும், அதை, அமைதியாகத் தான் வேடிக்கை பார்த்தாங்க... அப்புறம் எதற்கு, இதில், தீவிரம் காட்டப் போறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'
***

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங்: உலகிலேயே அதிக இளைஞர்கள் உள்ள நாடாக, இந்தியா உள்ளது. அதனால், பழம்பெரும் கட்சியான, காங்கிரசுக்கு, இளைஞர் ஒருவர் தலைமை ஏற்பது தான் சிறந்தது.

டவுட் தனபாலு: கட்சி தலைமைக்கு மட்டும்தான் இது பொருந்துமா... இல்லை, ஆட்சி தலைமைக்கும் பொருந்துமா... ஏன்னா, 75 வயதை கடந்த நீங்க, இந்த, 'டவுட்'டைக் கொஞ்சம் விலாவாரியாக விளக்கினால் என்ன...!

***

பத்திரிகை செய்தி: பா.ம.க., சார்பில், ராஜ்யசபா தேர்தலில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி போட்டியிட உள்ளார்.

டவுட் தனபாலு: பா.ம.க.,வின் அரசியலே, அன்புமணியைச் சுற்றித் தான் இருக்கு என்ற குற்றச்சாட்டு இருந்தது... லோக்சபா தேர்தலில், தர்மபுரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகும், ராஜ்யசபா,எம்.பி.,யாக, அன்புமணியை முன்னிறுத்துவது, அந்த,'டவுட்'டை வலுப்படுத்துது... தேர்தல் முடிவு குறித்து முன்கூட்டியே தெரிந்ததால் தான், அ.தி.மு.க.,விடம் கறாரா பேசி, ராஜ்யசபா, 'சீட்'டை வாங்குனாங்களோ...!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
08-ஜூலை-201921:16:21 IST Report Abuse
karutthu அன்புமணிக்கு கொடுத்த சீட்டை தமிழிசை க்கு கொடுத்திருக்கலாம் .தமிழ் நாட்டிற்க்காக அவர்கள் மேலிடத்தில் பேசி நமக்கு நல்லது செய்வார்களே
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஜூலை-201904:01:55 IST Report Abuse
D.Ambujavalli சந்தேகம் என்ன? தங்கள் மகனுக்காக எந்தத் ‘தியாகமும்’ செய்யும் தந்தைமார் வரிசையில் மருத்துவரும் சேராமல் இருப்பாரா? நாளையே தம் பெயரிலும், மகன் பெயரிலும் சில மது ஆலைகளுக்கு அனுமதி பெற்று தொடங்கினாலும் வியப்பில்லை இவர்தான் ‘நானோ என் குடும்பமோ ஒருக்காலும் எந்த தேர்தலிலும் நிற்க மாட்டோம் . ‘ என்று சூளுரைத்தவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X