பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பஞ்சாப் நேஷனல் வங்கியில்
ரூ.3,800 கோடி மோசடி

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் மற்றொரு நிறு வனம் 3800 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ரூ.3,800 கோடி, மோசடி,பஞ்சாப் வங்கி, நிரவ் மோடி


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடியும் அவரது உறவினர் மெஹுல் சோக்சியும் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பினர்.

நாடு கடத்தும் முயற்சி:


இதில் நிரவ் மோடி ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது

செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹுல் சோக்சி கரீபியன் நாடான ஆண்டி குவாவில் பதுங்கியுள்ளார். இவர்களை நாடு கடத்தும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3800 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பி.பி.எஸ்.எல். எனப்படும் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் என்ற நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சண்டிகர் கிளையில் 3200 கோடி ரூபாயும் துபாய் கிளையில் 345 கோடி ரூபாயும் ஹாங்காங் கிளையில் 268 கோடி ரூபாயும் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது.

மொத்தம் 3800 கோடி ரூபாய் அளவிற்கு பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் மோசடி செய்திருப்பதாக ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிக்கை அளித்திருக்கிறது. அதில் 'நிறுவன மேம்பாட்டிற்கு எனக்கூறி வங்கியிலிருந்து பெற்ற நிதியை பி.பி.எஸ்.எல். முறைகேடாக பயன்படுத்தியுள்ளது.

Advertisement

வழக்கு பதிவு:


'எங்களிடம் மட்டுமின்றி மற்ற வங்கி கூட்ட மைப்புகளிடமிருந்து நிதி திரட்டுவதற்காக எங்கள் வங்கியை பயன்படுத்தி மோசடி செய்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குனர்கள் ஆடிட்டர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிதி மோசடி தடுப்புக் குழுக்களில் ஒன்றான எஸ்.எப்.ஐ.ஓ. எனப்படும் தீவிர முறைகேடு விசாரணை அலுவலகமும் நடவடிக்கையை துவக்கியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201900:03:08 IST Report Abuse

Rajபொது மக்கள் பணம் எல்லா வழியிலும் சூறையாடப்படுகிறது. "மன்னார் அண்ட் கம்பெனி" என்று பெயர் வைக்காத குறை தான். பல தனியார் நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவது போல காட்டி கொண்டாலும் உண்மை நிலை அன்றாடங்காய்ச்சி பிழைப்பு தான். லாபத்தில் வரும் பணத்தையும் வெளி நாடுகளில் பதுக்கி, கடன் திருப்பி கொடுக்காமல் நஷ்ட கணக்கு காண்பிக்க பல வழிகளை கையாளுகின்றனர். இன்றும் இது நடக்கிறது என்பது தான் உண்மை. வாரா கடன் கடந்த 4 வருடங்களாக உயர்ந்து கொண்டு போவதும் இப்படித்தான். பூனைக்கு யார் மணி கட்டுவது ? ஆட்சி மாறினாலும் திருடர்கள் வேறு வேடங்களில் வந்து திருடுகிறார்கள். பெரிய பொருளாதார குற்றங்களுக்கு என்று மரண தண்டனை கிடைக்கிறதோ அன்று இது மாறும் என்று நினைக்கிறேன்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜூலை-201922:58:28 IST Report Abuse

தமிழ்வேல் நேருஜி தப்பா இருக்கும்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-ஜூலை-201912:32:15 IST Report Abuse

Nallavan Nallavanகொஞ்சம் ஆங்கிலப் பத்திரிகைகளையும் ஆன்லைனிலாவது படிக்கணும் ..... கலைஞர் டிவியே கதின்னு இருக்கக் கூடாது தமிழு ..... ...

Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-ஜூலை-201918:32:08 IST Report Abuse

M S RAGHUNATHAN1. The primary responsibility rests with Auditors appointed by RBI who audit the Bank every year at the of financial year and assess the health and quality of loans and advances. If the bank people had suppressed any details which they note should be brought out and reported to RBI. Such of those auditors should be arrested, their license be cancelled. 2. This Chandigarh branch is a very big branch headed by a GM level officer and how he failed to notice the symptoms of siphoning of funds. He should also be arrestex. 3. Such a big branch will have concurrent audit i.e. daily audit of transactions. How the auditors missed the bus ? Did they brought the irregularity to the Branch Manager and controlling Office ? If not these concurrent auditors should also be taken to task. 4. In these big branches such huge exposure accounts will be monitored by a Senior desk level officer who is generally a CA/ICWA. Did they report the the incipient sick to the Br Head? If not all those officials should be dismissed and proceeded forthwith. 5. For such large accounts, there are lot of statements to be submitted by the borrower like QIS. These statements are not submitted or submitted belatedly. and never scrutinized. 6. For such accounts stock audit and audit of receivables should be conducted. The inspectors never do this because either they have little time or carried away by the company's so called reputation and hanky panky explanation of BM. In short, there are large checks and balances in the tem, but never followed. RBI's Department of Banking operation should be held responsible for this chaotic situation.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X