பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கோடீஸ்வரர்களுக்கு வரி அதிகரிப்பு
நிதி அமைச்சகம் விளக்கம்

புதுடில்லி: 'அதிக வருவாய் பிரிவினருக்கான வரி உயர்வு மற்ற நாடுகளை விட நம்நாட்டில் மிகவும் குறைவு' என நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வரி அதிகரிப்பு, நிதி , அமைச்சகம், பட்ஜெட்


சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 - 2020ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உயர் வருவாய் பிரிவினருக்கான வருமான வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக வருவாய்:


ஆண்டு வருமானம் 2 - 5 கோடி ரூபாய் வரை உள்ளவர்களுக்கான கூடுதல் வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதன் மூலம் இந்தப் பிரிவினருக்கான வரி 35.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு கூடுதல் வரி 15ல் இருந்து 37 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவினருக்கான மொத்த வரி 42.7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

இது குறித்து மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: 'நாட்டின் வளர்ச்சியில் வருமான வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது. அதிக வருவாய் ஈட்டுவோர் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை அதிக அளவில் அளிக்க வேண்டும்' என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.

ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரும் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவோரும் ஒரே வரியை செலுத்துவது எந்த விதத்திலும் சரியானதல்ல. அதிக வருவாய் ஈட்டுவோர் அதிக வரியை செலுத்த வேண்டும். அதன்படியே உயர் வருவாய் பிரிவினருக்கான வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் விதிக்கப்படும் உயர் வருமான வரி விகிதம் குறைவே. சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 45 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது.

வரி வசூலிப்பு:


அமெரிக்காவில் 50.3 சதவீதம்; பிரிட்டனில் 45 சதவீதம்; ஜப்பானில் 45.9 சதவீதம்; கனடாவில் 54 சதவீதம்; பிரான்சில் 66 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அவற்றுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயர் வருமான வரி விகிதம் குறைவே. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-ஜூலை-201920:48:03 IST Report Abuse

Krishnamurthy Venkatesanசெலவினங்களை அதிகமாக்கி லாபத்தை குறைத்தால் வரி தன்னைப்போல் குறையும்.

Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
08-ஜூலை-201918:09:07 IST Report Abuse

Asagh busaghஇனிமே சொடலை, மாறன் பிரதர்ஸ், குடோன்முருகன், சிதம்பரம் & பேமிலி, இபிஎஸ் & ஓபிஎஸ் எல்லாம் திடீர் பரம ஏழைகளா ஆகிடுவானுங்க. பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டஸ் ஓரளவுகாவது மேற்கொண்டோனா வரியை கட்டுவாங்க. ஆனா மக்களோ அரசியல்வாதிங்க கொஞ்சமா அள்ளி தெளிக்கிற ஓசிய வாங்கிகிட்டு அவனுங்க அடிக்கிற கொள்ளைய கண்டுக்காம வேலை வாய்ப்ப ஏற்படுத்துகிற தொழில் அதிபர்கள மட்டும் திட்டுவோம்.

Rate this:
08-ஜூலை-201917:59:45 IST Report Abuse

ஆப்புபுறநானூறிலே இதுக்கு சான்றாக ஏதாவது பாடல் இருக்கா?

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X