சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழநி கோயில் நவபாஷாண சிலையை கடத்த சதி
ஸ்தபதி திட்டம் தீட்டியது அம்பலம்;
பின்னணி வி.ஐ.பி.,கள் விரைவில் கைது

பழநி : பழநி முருகன் கோயிலின் நவபாஷாண முருகன் மூலவர் சிலையை கடத்த தலைமை ஸ்தபதி முத்தையா சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள் யார் என விசாரணை நடக்கிறது.

பழநி,கோயில்,நவபாஷாண சிலை,கடத்த சதி,ஸ்தபதி,திட்டம்,அம்பலம்


போகர் சித்தரால் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பழநி கோயிலில் மூலவராக வழிபடப்படுகிறது. 2004ல் நவபாஷாண சிலை வலு இழந்து விட்டதாக அதை மறைத்து 200 கிலோவில் ஐம்பொன் உற்ஸவர் சிலை வைக்கப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி சேர்க்கப்பட்டதில் மோசடி நடந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு

அதிகாரி பொன் மாணிக்கவேல் குழுவினர் சில மாதங்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, கோயில் இணை ஆணையர் கே.கே.ராஜா, ஆணையர் தனபால், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நவபாஷாண சிலையை கடத்தி வெளிநாட்டில் விற்க சதி நடந்ததா என விசாரணை நடத்தினர். பழநி கோயிலில் நேற்று முன்தினம் முதல் பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அமுதவள்ளி, தமிழ்ச்செல்வி குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஐம்பொன் உற்ஸவர் சிலை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த போது, நவபாஷாணத்திற்கு அருகே தங்கத்தை வைத்தால் சிறிது காலத்தில் கருமையாக மாறிவிடும் எனவும், இதனால்தான் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிப்பது இல்லை எனவும் தெரிந்தது. இதனால் நவபாஷாண சிலையை மறைத்து ஐம்பொன் உற்ஸவர்

Advertisement

சிலையை வைத்ததும், காலப்போக்கில் அதை மூலவராக வைத்து விட்டு நவபாஷாண சிலையை கடத்த சதி செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார் கூறுகையில், ''நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதா என விசாரித்தோம். அது உண்மைதான். ஸ்தபதி முத்தையாவே இந்த திட்டத்தை தீட்டி உள்ளார். அவரை இயக்கியவர்கள் யார் என விசாரிக்கிறோம்'' என்றார்.

பொன் மாணிக்கவேலிடம் கேட்டபோது ''சிலையை கடத்த சதி செய்த யாரும் தப்ப முடியாது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இரு நாட்கள் கழித்து மீண்டும் பழநிக்கு வருவேன்'' என்றார்.

'யாராக இருந்தாலும் கைது'

நவபாஷாணம் என்பது தீராத நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது. பழநி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர், பாலை குடித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் முருகன் சிலையின் முதுகு பகுதியில் இருந்து நவபாஷாணத்தை சுரண்டி சிலர் விற்று விட்டதாக பல ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை கிளம்பியது. தற்போது சிலையையே மாற்றி விட்டு கடத்த சதி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் பின்னணியில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
08-ஜூலை-201923:12:31 IST Report Abuse

venkatanஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு தனிகூட்டம் நாட்டையே சுரண்டிக்கொண்டுள்ளது.இந்தியாவிற்கு,வளர, செழிக்க நம்ம ஊழல்,அதர்ம வினைகளை அளிக்க கூடிய ஆற்றல் சன நரகத்திற்கு இல்லை போலும்.

Rate this:
bal - chennai,இந்தியா
08-ஜூலை-201921:34:21 IST Report Abuse

balஇந்த சிலை திருட்டு செய்யும் அதிக ஆட்கள் இட ஒதுக்கீட்டில் அறநிலையத்துறைக்கு வேலைக்கு வந்தவர்களாக இருப்பார்கள்.

Rate this:
08-ஜூலை-201916:42:05 IST Report Abuse

ருத்ராஇறைவன் மேல் நம்பிக்கை இல்லை ஆனால் இதை விற்றால் வரும் கோடிகள் மேல் நம்பிக்கை உண்டு சிலருக்கு.. அழிவை தேடிக்கொள்கிறார்கள்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X