பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தரவரிசையில் கல்வி நிறுவனங்கள் பின்னடைவு;
காரணங்களை ஆராய்கிறார் மத்திய அமைச்சர்

புதுடில்லி: நம் நாட்டின், உயர் கல்வி நிறுவனங்கள், க்யு.எஸ்., தரவரிசையில் ஏன் பின்னடைவை சந்தித்துள்ளன என்பது குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஆராய்ந்து வருகிறது.

தரவரிசையில் கல்வி நிறுவனங்கள் பின்னடைவு; காரணங்களை ஆராய்கிறார் மத்திய அமைச்சர்


பிரிட்டன் தலைநகர், லண்டனைச் சேர்ந்த, புகழ்பெற்ற, க்யூ.எஸ்., எனப்படும், 'குயுக்குயாரெல்லி சிமாண்ட்ஸ்' என்ற, நிறுவனம், சர்வதேச அளவில், உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், 2020ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல், கடந்த மாதம் வெளியானது. இதில், உலகின் முதல், 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில், ஐ.ஐ.டி., பாம்பே, ஐ.ஐ.டி., டில்லி, ஐ.ஐ.எஸ்சி., பெங்களூரு ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

அதுபோல, ஐ.ஐ.டி., மெட்ராஸ், ஐ.ஐ.டி., காரக்பூர், ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., ரூர்கி ஆகிய கல்வி நிறுவனங்கள், முதல், 400 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனினும், கடந்த ஆண்டில், 472வது இடத்தை பிடித்திருந்த, ஐ.ஐ.டி., கவுஹாத்தி, இந்த ஆண்டில், 491வது இடத்திற்கு வந்துள்ளது.

அதே நேரத்தில், புதிதாக இடம்பெற்ற, கல்வி நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த, ஓ.பி.ஜிந்தால் குளோபல் யுனிவர்சிட்டி, 1,000 நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. கல்வி நிறுவனங்களின் ஆறு முக்கிய தகுதிகளின் அடிப்படையில், தர வரிசை தீர்மானிக்கப்படுகிறது. கல்வித்தரம், வேலையளிப்பவர்களின் மதிப்பு, மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம், துறைகளின் தனித்தன்மை, சர்வதேச ஆசிரியர்கள் பங்கேற்பு மற்றும் பயிலும் சர்வதேச மாநாடுகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதில், இந்திய கல்வி நிறுவனங்கள், மிகவும் பின்தங்கியிருப்பது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்,

Advertisement

பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமேஷ் பெக்ரியால் நிஷாங், இது குறித்து கல்வித்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், க்யு.எஸ்., தர வரிசைக்கான தேவைகளை, இந்திய கல்வி நிறுவனங்கள் சிறப்பாக பெற்றுள்ள நிலையில், தர வரிசையில் மிகவும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை ஆராயுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காரணங்களை ஆராய்வதற்காக, அமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில் பங்கேற்ற பல கல்வியாளர்கள், இது தொடர்பாக விவாதித்தனர். 'இளங்கலைப் படிப்பில் போதிய கவனம் இல்லாமல் இருப்பது; வெளிநாட்டு நிபுணர்களை, ஆசிரியர்களாக அதிக அளவில் பணியமர்த்தாது' உள்ளிட்ட காரணங்களை, அவர்கள் பட்டியலிட்டனர்.

Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
08-ஜூலை-201920:33:25 IST Report Abuse

Nathansanda, mandau, toos, venisda, என்றெல்லாம் இட ஒதுக்கியிட்டு ஆனா சிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதைத்தான் பார்க்கிறமே. இதில் டேபிள் மேல் கால் போட்டு குறட்டை விடுதல் வேறு. அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சத்திரம் கட்டி மாத மானியம் போடுங்க , கல்வியில் விளையாடாதீர்.

Rate this:
BJRaman - Chennai,இந்தியா
08-ஜூலை-201919:23:47 IST Report Abuse

BJRamans://tneaonline.in/ இயங்கவில்லை. முதல் நாள் யாராலும் இந்த web site use செய்ய முடியவில்லை

Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-ஜூலை-201918:44:37 IST Report Abuse

M S RAGHUNATHANIf you want quality to improve in education, then do away with reservation in the recruitment of teachers from primary level to college level. Only those who are an attitude and interest in teaching should be appointed. Close down all the Educational institutions which do not have the infra structure and qualified faculty. Insist that UGC scales of pay should be paid vto to such teachers. the syllabi at every stage. Banks should not be asked to give loans to all and sundry throwing caution to wind. This helps onlt the politicians who own these colleges. If we try to do this there will be an uproar that social Justice is buried and there is aryan invasion. I am sure education in India will go down further and time is not far off when the degrees of our universities will not be recognised internationally.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X