நாடு முழுவதும் காவல் துறையில் 5 லட்சம் பதவிகள் காலி

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள காவல் துறையில் 5.28 லட்சம் பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாடுமுழுவதும் போலீஸ் படையில் 23 லட்சத்து 79 ஆயிரத்து 728 இடங்கள் உள்ளன.இவற்றில் கடந்த 2018 ஜனவரி ஒன்றாம் தேதி நிலவர படி 18 லட்சத்து 51 ஆயிரத்து332 இடங்கள் நிரப்பப்பட்டு

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள காவல் துறையில் 5.28 லட்சம் பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாடுமுழுவதும் போலீஸ் படையில் 23 லட்சத்து 79 ஆயிரத்து 728 இடங்கள் உள்ளன.இவற்றில் கடந்த 2018 ஜனவரி ஒன்றாம் தேதி நிலவர படி 18 லட்சத்து 51 ஆயிரத்து332 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 5லட்சத்து 28 ஆயிரத்து 396 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.


latest tamil news




நாட்டின் மிக பெரிய மாநிலமாக உள்ள உ.பி., மாநிலத்தை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 952 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து பீகாரில் 50 ஆயிரத்து291, மே.வங்கத்தில் 48 ஆயிரத்து 981, தெலுங்கானாவில் 30 ஆயிரத்து345 இடங்களும் காலியாக உள்ளன.


தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 இடங்களில் சுமார் 22 ஆயிரத்து 420 இடங்கள் காலியாக உள்ளன. ம.பி., யில் 22 ஆயிரத்து 355-ம் , கர்நாடகாவில் 21 ஆயிரத்து943, குஜராத்தில் 21 ஆயிரத்து070 , ஜார்கண்ட்டில் 18 ஆயிரத்து931, ராஜஸ்தானில் 18 ஆயிரத்து 003, ஆந்திராவில் 17 ஆயிரத்து933, ஹரியானாவில் 16 ஆயிரத்து 844, சட்டீஸ்கரில் 11 ஆயிரத்து916, ஓடிசாவல் 10 ஆயிரத்து 322 இடங்களும் காலியாக உள்ளன.


மேற்கண்ட மாநிலங்களை தவிர வட இந்திய மாநிலமான நாகாலந்தில் மட்டும் விதிவிலக்காக அதிகளவிலான போலீஸ் அதிகாரிகள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இம் மாநிலத்தில் போலீஸ் படை பிரிவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள 21 ஆயிரத்து292 பணியிடங்களை காட்டிலும் சுமார் 940க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளதாக மத்திய அரசின் உள்துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூலை-201919:30:17 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே இருக்க உடுங்க...இருக்குறவங்க அடாவடியே தாங்க முடியல... லஞ்சம் குடுத்து கட்டுப் படியாகலை... மேல, அரசுக்கும் சம்ப்பளம், இதர செலவுகள் மிச்சம்.
Rate this:
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
08-ஜூலை-201912:58:31 IST Report Abuse
Ramasamy இவ்வளவு காலி இடங்களை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று சொன்னால் எந்த வைகையில் ஞாயம்?
Rate this:
Cancel
Varathappan Parthasarathy - Karur,இந்தியா
08-ஜூலை-201910:59:14 IST Report Abuse
Varathappan Parthasarathy ஐந்து லட்சம் போலீஸ் போட்டால் திருட்டு குறையலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X