அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா ; திமுக சார்பில் கூடுதல் வேட்பாளர்

Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (38)
Advertisement
என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர், ராஜ்யசபா, கூடுதல் வேட்பாளர்

சென்னை : திமுக சார்பில் ஏற்கனவே 2 பேர் ராஜ்யசபா வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவரை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், வரும் ஜூலை 18 ல், ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் 3 பேரும், திமுக சார்பில் 3 பேரும் வெற்றிபெற வாய்ப்புள்ள நிலையில், திமுக சார்பில் 2 பேரும், ஒப்பந்தப்படி மதிமுக சார்பில் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக சார்பில் 2 பேரும், ஒப்பந்தப்படி பா.ம.க., சார்பில் அன்புமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தேசதுரோக வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள திமுக அணி வேட்பாளர் வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதால் அதை எதிர்கொள்வதற்காக, திமுக சார்பில் மேலும் ஒரு வேட்பாளரை மனுத்தாக்கல் செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது.
கூடுதல் வேட்பாளராக, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. இன்று மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். நாளை வேட்பு மனு பரிசீலனை தொடங்க உள்ளது.


வரும் 11 ம் தேதி வரையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAS - chennai,இந்தியா
08-ஜூலை-201923:00:06 IST Report Abuse
RAJAS அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட சட்ட பிரிவு Representation of people சட்டத்தின் கீழ் வராது. எனவே தேர்தல் தடை இருக்காது என்று தெரிகிறது. மேலும் 1995 உச்ச நீதிமன்றம் வழங்கிய இன்னொரு வழக்கின் contents கருத்தில் கொள்ளப்படவில்லை. மேல் அப்பீல் செய்தால் கேசே நிற்காது என்று தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
08-ஜூலை-201918:31:37 IST Report Abuse
Kannan ஒரு தேச துரோஹி என்று கோர்ட் முத்திரை வாங்கிய ஒரு நபர் மாநிலங்கள் அவைக்கு தமிழ் நாட்டில் இருந்து சென்றால் என்ன அவமானம்? வெட்கம் கேடு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
08-ஜூலை-201914:54:42 IST Report Abuse
தமிழ் மைந்தன் கிராமப்புற பழமொழி " செருப்பால் அடித்துவிட்டு கருப்பட்டியை கொடுத்தானம்"" இதில் அடித்தது யார்,அடிபட்டது யார் என்பது எனக்கு தெரியாது......ஆனால் கருப்பட்டிக்கு அரசியலில் தேசதுரோகம் என்ற பெயர் உண்டு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X