ஆதரவு தருது அதிமுக; எதிர்க்குது திமுக| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதரவு தருது அதிமுக; எதிர்க்குது திமுக

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (83)
Share

சென்னை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டும் என திமுக.,வும், 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தமிழகத்துக்கு கூடுதலாக 586 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என அதிமுக.,வும் தெரிவித்துள்ளன.latest tamil newsமுற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு முன் வைத்து உள்ளது. அதை, தற்போது நடைபெறவுள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான சேர்க்கையில் அமல்படுத்தவும் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை, அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க, துணை முதல்வர், ஓ.பி.எஸ்., தலைமையில், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.


latest tamil news
தமிழகம் முன்னோடி:


கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாரும் இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை. இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு கொள்கை, நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் இருந்து தொடங்குகிறது.


இடமளிக்கக்கூடாது:


'பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு' என்ற சொற்றொடர், அரசியல் சட்டத்தில் இடம் பெறவில்லை. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட தமிழக அரசு இடமளித்து விடக்கூடாது.


latest tamil news
சமூக நீதி சீர்குலையும்:


நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னோர் நமக்கு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையை, ஏமாற்று வாக்குறுதிக்கு பலியாக்கக்கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை தீர்மானிக்கும் வரையறை நிச்சயமற்றது. அந்த வரையறை மூலம் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியை சீர்குலைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


ஓபிஎஸ் ஆதரவு:


10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.


latest tamil news
கூடுதலாக 586 இடங்கள்:


அவர் பேசியதாவது: கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டி காத்து வருகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1,000 மருத்துவ இடங்களை பெற முடியும். தற்போதுள்ள ஒதுக்கீட்டின்படி 586 மருத்துட இடங்கள் இட ஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும். 3,825 இடங்களில், 383 இடங்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கினாலும் கூடுதலாக 586 இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக., பா.ஜ., காங்., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவும், திமுக., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X