மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (62)
Advertisement

புதுடில்லி : முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு ஒன்று தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.






கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர், மாநில உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 'முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார். அந்த மனு, உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.





அதையடுத்து, அந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அமர்வு முன், அந்த மனு, இன்று(ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்திருந்த சாமியாரும், நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் தலைமை நீதிபதி, ''இந்த வழக்கை தொடர, நீங்கள் யார்; எந்த விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்; பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் எங்கள் முன் வர வேண்டும்,'' என்றார்.





அதற்கு பதிலளிக்கும் வகையில், அந்த சாமியார் மலையாள மொழியில் பேச முற்பட்டார். 'அவர் பேசுவது புரியவில்லை; அவரின் வழக்கறிஞர், மொழி மாற்றம் செய்யுங்கள்' என, நீதிபதிகள் கூறினர். அதையடுத்து, சாமியார் சார்பில், வழக்கறிஞர் ஒருவர் பேசினார். எனினும், அந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், 'கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற, நாங்கள் விரும்பவில்லை. இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.

கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் போது, 'வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, அதன் விபரங்கள் ஊடகங்களுக்கு சென்று விட்டன. விளம்பரத்திற்காகவே, வேண்டுமென்றே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, நீதிபதிகள், அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar - Chennai,இந்தியா
15-ஜூலை-201910:55:17 IST Report Abuse
Ajit Kumar சாமி சிலையை தொட அனுமதியுங்கள்,
Rate this:
Share this comment
Cancel
09-ஜூலை-201918:24:09 IST Report Abuse
Ganesan Madurai முஸ்லிம் பெண்தான் மசூதியில் தொழ வழக்காடலாம் ஆனால் இந்து சபரிமலையில் யார் தொழலாம் என்பதை முடிவி செய்ய ஒரு முஸ்லிம் வழக்காடலாமா? என்னய்யா நடக்குது.
Rate this:
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
09-ஜூலை-201911:16:19 IST Report Abuse
Indian இஸ்லாத்தில் ஏற்கனவே மசூதியில் பெண்களுக்கு பிரார்த்தனை பண்ண அனுமதி இருக்கிறது. எல்லா மசூதியிலயும் அதற்கான தனி இடம் ஏற்பாடு செய்யவில்லை. அரபு நாடுகளில் எல்லா மசூத்திலயும் பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X