அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., கொள்கையின் படி நல்ல முடிவு: பன்னீர் உறுதி

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

சென்னை: '10 சதவீத இடஒதுக்கீட்டு விவகாரத்தில், ஜெ., கொள்கையின் படி அரசு நல்ல முடிவு எடுக்கும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.



latest tamil news



முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான சேர்க்கையில் அமல்படுத்துவது தொடர்பாக துணை முதல்வர், பன்னீர் செல்வம் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 5 கட்சிகள் ஆதரவும், 16 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன.


ஆதரவு:


பா.ஜ., காங்., மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் மற்றும் த.மா.கா., கட்சிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


latest tamil news




எதிர்ப்பு:


தி.மு.க., ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், இ.கம்யூ., மற்றும் வி,சி உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


latest tamil news




சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை:


கூட்டம் நிறைவுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது: அனைத்து கட்சி கூட்டத்தில், ஜெயலலிதா கொண்டுவந்து 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் வரக்கூடாது என கட்சிகள் வலியுறுத்தின. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அரசு நல்ல முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூலை-201909:34:21 IST Report Abuse
ருத்ரா நன்கு படித்த திறமையானவர்கள் யாராக இருந்தாலும் ஏழமையானவர் என்றால் உதவ வேண்டும். பாரபட்ச மின்றி.
Rate this:
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
09-ஜூலை-201908:09:05 IST Report Abuse
ramanathan இந்த இட ஒதுக்கீடானது களவாணி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல திருட்டு திமுக வுக்கும் செய்ய மனமில்லாமல் போனது நான் ஸ்டாலினை எச்சரிக்கிறேன் இந்த 10 %வீத இட ஒதுக்கீடை அரசியலாக்காதீர்கள் நீங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவா அரசியல் செய்கிறீர்கள் இல்லை மக்கள் நம்ப வில்லை. முற்பட்ட சமூக மக்கள் ஏழையாய் பிறந்தால் அவன் ஏழையாய் சாக வேண்டியதுதான்? முட்டாள் தனமாக இல்லை
Rate this:
Ramasubramanian Sk - pondicherry,இந்தியா
09-ஜூலை-201911:18:24 IST Report Abuse
Ramasubramanian Sk16 கட்சிகள் எதிர்க்கின்றன , அவ்வளவு நல்ல மனசு ? இவ்வளவு காலம் இட ஒதுக்கீடு இருந்தும் socially backward என்றால் உங்களுக்கு உள்ளேயே பிரச்னை இருக்கு. முன்னேறிய சமுதாயம் காரணம் அல்ல...
Rate this:
Cancel
Boopathi. S -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-201907:52:27 IST Report Abuse
Boopathi. S ஏழைகளுக்காக பாடும் திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றது?.ஏனெனில் அவர்கள் நோக்கம் ஏழைகளை காப்பாற்றுவதல்ல. அவர்களின் கல்லாப்பெட்டியை காப்பாற்றுவதே.பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு ஒன்றே சிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X