பொது செய்தி

இந்தியா

'நியூஸ் பிரின்ட்' மீது, 10 சதவீத வரி வாபஸ் பெற, ஐ.என்.எஸ்., கோரிக்கை

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : 'செய்தித்தாள் அச்சிட பயன்படுத்தப்படும், 'நியூஸ் பிரின்ட்' மற்றும் பிற வகை பேப்பர்கள் மீது, மத்திய அரசு விதித்துள்ள, 10 சதவீத சுங்க வரியை வாபஸ் பெற வேண்டும்' என, இந்திய செய்தித் தாள் சங்கமான, ஐ.என்.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளது.



latest tamil news



ஐ.என்.எஸ்., தலைமை செயலர், மேரி பால், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுபவர்கள் ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.


பலத்த நஷ்டம்

விளம்பர வருமானம் குறைவு, செய்தித் தாள் வெளியீட்டுக்கு அதிக செலவு, தொழில்நுட்ப ரீதியில் வலுவானவர்கள், 'டிஜிட்டல்' மீடியாவை நடத்துவது போன்றவற்றால், செய்தித் தாள்கள் வெளியீட்டாளர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகுகின்றனர். இந்நிலையில், செய்தித்தாள் அச்சிட பயன்படுத்தப்படும் நியூஸ் பிரின்ட் மீது சுங்க வரி விதிப்பு, செய்தித் தாள்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்.


latest tamil news



தொடர்ந்து நடத்த முடியாமல், இழுத்து மூட வேண்டிய நிலைமை கூட, பல நிறுவனங்களுக்கு ஏற்படும். இந்திய செய்தித் தாள் வெளியீட்டு நிறுவனங்களின், நியூஸ் பிரின்டுக்கான ஓராண்டு நுகர்வு, 25 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி, 10 லட்சம் டன் என, மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், இறக்கு மதியைத் தான் அதிகமாக நம்பி இருக்க வேண்டி உள்ளது.


latest tamil news




வலியுறுத்தல்


இந்நிலையில், நியூஸ் பிரின்ட் மீது, கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள, 10 சதவீத சுங்க வரி,செய்தித்தாள்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள சுங்க வரியை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, ஐ.என்.எஸ்., தலைமை செயலர், மேரி பால் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜூலை-201917:20:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிறந்த வழி.
Rate this:
Share this comment
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
09-ஜூலை-201907:50:40 IST Report Abuse
Siva Subramaniam காடுகளும் மரங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், வரியை இனியும் உயர்த்த வேண்டும். பலநாடுகளில்,பேப்பர் அச்சிடுவதை நிறுத்திவிட்டார்கள், எலக்ட்ரானிக் பாதிப்புகள் தான் உள்ளன. நாம் இனியும் இந்த விஷயத்தில் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறோமே.
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201907:07:35 IST Report Abuse
Raj நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் பாதி விளம்பரம் செய்வதிலேயே செலவாகிறது. விளம்பரம் செய்பவர்கள் இன்னும் 10 % கூட செலவழித்தால் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X