பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
200 சதவீதம்!
பாகிஸ்தான் பொருட்களுக்கு சுங்க வரி...
லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடில்லி: அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும், அனைத்து விதமான பொருட்களுக்கும், 200 சதவீதம் சுங்க வரி விதிப்பது என்ற, மத்திய அரசின் அறிவிப்புக்கு, லோக்சபாவில், நேற்று ஒப்புதல் கிடைத்தது. இதற்காக, சுங்க கட்டண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, லோக்சபாவில் அனைத்துக் கட்சி, எம்.பி.,க்களும் ஆதரவு அளித்தனர்.

Pakistan,பாகிஸ்தான்,பாக்., பொருட்கள்,சுங்க வரி,200 சதவீதம்,லோக்சபா,தீர்மானம்,நிறைவேற்றம்


அண்டை நாடாக இருந்த போதிலும், சண்டை நாடாகவே தொடர்ந்து விளங்கும் பாகிஸ்தான், எந்த சூழ்நிலையிலும், இந்தியா மீதான வெறுப்பை கைவிடுவதாக இல்லை. நம் முன்னாள் பிரதமர்கள் சிலர், அந்நாட்டுடன் நல்லுறவு பேண, மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்தியாவின் அமைதி விருப்பத்தை தவறாக புரிந்து கொண்ட பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, நம் நாட்டின் நிம்மதியை சீர்குலைத்து வந்தது.

உடல் சிதறி பலி:


உச்சக்கட்டமாக, கடந்த பிப்ரவரி, ௧4ல், ஜம்மு - காஷ்மீரின், புல்வாமா என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், 40 பேர் உடல் சிதறி பலியாகினர். வீரர்களின் வாகன அணிவகுப்பு அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில், நம் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் பதுங்கியிருந்த அந்நாட்டு பயங்கரவாதிகள் மீது, நம் விமானப்படை தாக்குதல் நடத்தி, 300க்கும் மேற்பட்டோரை அழித்தது.

அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி, ௧௫ல், பாகிஸ்தானுக்கு அதுவரை அளித்து வந்த, மிகவும் நெருக்கமான நாடு என்ற அந்தஸ்தையும், மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதனால், சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு ஆளான பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக, 'பாவ்லா' காட்டியது.

விற்க முடியாது:


எனினும், அந்நாட்டு மீதான நடவடிக்கை போதாது என கருதிய, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பிப்ரவரி, 16ல், 'பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வரும் எந்த விதமான பொருளாக

Advertisement

இருந்தாலும், அதற்கு, 200 சதவீத வரி விதிக்கப்படும்' என, அதிரடியாக அறிவித்தது. அதனால், பாகிஸ்தான் தயாரிப்பு பொருட்கள் எதையும், இந்தியாவில் விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வரும் பொருட்கள் அடியோடு நிறுத்தப்பட்டன.

அந்த பொருட்கள் மீது, 200 சதவீத வரி விதிக்கப்பட்டதால், உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் விலையுடன் ஒப்பிடுகையில், பல மடங்கு உயர்வாக இருந்ததால், பாகிஸ்தான் பொருட்களுக்கு, இந்தியாவில் சந்தை இல்லாமல் போயிற்று. இதனால், சிறகு அறுபட்ட பறவை போல, பாகிஸ்தான் முடங்கிக் கிடக்கிறது. அதுபோல, துாதரக ரீதியிலான பல நடவடிக்கைகளால், அந்நாடு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு' என்ற முத்திரை வலுவாக குத்தப்பட்டுள்ளதால், சர்வதேச நிதியுதவி கிடைக்காமல் அல்லாடுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட, 200 சதவீத சுங்க வரிக்கு, பார்லிமென்டின் ஒப்புதலை பெறும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு, அதற்கான தீர்மானத்தை, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்து, வெற்றிகரமாக நிறைவேற்றியது.

சட்ட திருத்தம்:


பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதித்துறை இணையமைச்சர், அனுராக் தாக்குர், தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதற்கு அனைத்து கட்சி, எம்.பி.,க்களும் ஆதரவு அளித்ததை அடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக, சுங்கவரி கட்டண சட்டத்தின், 8 ஏ(1) பிரிவில் திருத்தம் மேற்கொள்ளவும், லோக்சபாவின் அனுமதி கிடைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-ஜூலை-201918:53:10 IST Report Abuse

PANDA PANDI200 போட்டாலும் 400 போட்டாலும் எப்படி வருகிறது. என்னதான் அப்படி கொண்டுவரர்கள். புரியலையே தலைவா.

Rate this:
karutthu - nainital,இந்தியா
09-ஜூலை-201918:05:07 IST Report Abuse

karutthuஇதே மாதிரி சீன பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும் இதனால் நம் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்படுகிறது .

Rate this:
Mano - Madurai,இந்தியா
09-ஜூலை-201912:58:19 IST Report Abuse

Manoஎப்படிதான் கதறினாலும், பாகிஸ்தான் வான் எல்லையை திறக்க மாட்டானுங்க. வே னும்னா, ஆஹா..ஓஹாேன்னு ச்தாேஷப் படலாம்.

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
09-ஜூலை-201918:48:04 IST Report Abuse

THENNAVANஇன்னும் விரட்டிடப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள் இங்கு. ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X