பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஐ.நா., மனித உரிமை அமைப்பு அறிக்கை
இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் நிலவிய, மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐக்கிய நாடுகளின், மனித உரிமை கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

U.N,United Nations,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை


கடந்த, 2018 மே முதல், 2019 ஏப்ரல் வரை, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிலவியதாக சொல்லப்படும், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்த, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, கடந்த ஆண்டில், முதல் அறிக்கையை வெளியிட்டது. அப்போதே அதற்கு, இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்த அறிக்கையின் பிற்சேர்க்கை என, புதிய அறிக்கையை, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, நேற்று வெளியிட்டுள்ளது.

தகவல்:


அதில், 'ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை தீர்க்க, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்பது உட்பட, பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கும், வெளியுறவுத்துறை, நேற்று கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: இப்போது வெளியாகிஉள்ள அறிக்கை, கடந்த ஆண்டில் வெளியான அறிக்கையின் தொடர்ச்சி தான். இந்த அறிக்கைகளில், ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை, தவறாக, வேண்டுமென்றே இட்டுக்கட்டி

Advertisement

கூறப்பட்டுள்ளது. இது, இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது.

பதிவு:


அதே நேரத்தில், எல்லைக்கு அப்பால், பாகிஸ்தானிலிருந்து ஏவி விடப்படும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து, அந்த அறிக்கையில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கைகளில் இடம்பெற்ற கருத்துகளுக்கு, நம் கண்டனத்தை, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின், துாதரிடம் பதிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
09-ஜூலை-201912:24:14 IST Report Abuse

Nallavan Nallavanசீனாவின் செல்வாக்கு ஐநாவில் அதிகரித்திருப்பதே காரணம்.. நம் தரப்பில் இந்தக் கண்டனம் மட்டும் போதாது.. மீண்டும் தலையிடாதவாறு சூடான பதில் தேவை...

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
10-ஜூலை-201913:31:40 IST Report Abuse

Gokul Krishnanஅமெரிக்கா தான் காரணம் . பின் வாசல் வழியாக தன் புத்தியை காட்டுகிறது ...

Rate this:
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
09-ஜூலை-201905:02:42 IST Report Abuse

Dr.T.Senthilsigamaniஜம்மு - காஷ்மீரில் நிலவிய, மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா., மனித உரிமை அமைப்பு அறிக்கை இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் .மிக நல்ல செய்தி . காஷ்மீரில் குண்டு வைக்கும் தீவிரவாதிகளை மற்றும் இந்திய ராணுவத்தின் மீது கல்லெறியும் கூட்டத்தை பற்றியெல்லாம் ,ஐ. நா. சபை கவலைப்பட்டதாக தெரியவில்லை .காஷ்மீர் எங்களுக்கே சொந்தம் என்று சொல்லி வரும் பாகிஸ்தான் பலமுறை மூக்கறுபட்டது தான் மிச்சம் .அது பற்றிய உண்மை சம்பவம் ஓன்று .சில வருடங்களுக்கு முன்பு .ஐ. நா. சபையில் ஐ. நா.வுக்கான பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் வழக்கம் போல பாகிஸ்தான் நாட்டுக்கான .ஐ. நா. பிரதிநிதி காஷ்மீர் எங்களுக்கே சொந்தம் - காஷ்மீர் எங்களுக்கே சொந்தம் என கூறி ,அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் இதோ - ஆதாரங்கள் இதோ -ஆதாரங்கள் இதோ -என பலப்பல -பல்வேறு வரலாற்று ஆவணங்களை சமர்ப்பித்து, உறுதியான/திடமான/அழுத்தமான குரலில் இதன் மூலம் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தான் சொந்தம் ஆம் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு மட்டும் தான் சொந்தம் என .ஐ. நா சபையில் அரை மணிநேரம் பேசி முகத்தில் பெருமிதம் பொங்க இருக்கையில் அமர்ந்தார். ஐ. நா சபையே அவர் பேச்சை கை தட்டி வரவேற்றது .பாகிஸ்தான் நாட்டுக்கான .ஐ. நா. பிரதிநிதி தனது வாதத்திறமையால் இந்தியாவை வீழ்த்தியதாக சபை எண்ணியது .இப்போது இந்தியாவுக்கான ஐ. நா. பிரதிநிதி காஷ்மீர பிரச்சினையை பேச இருக்கை விட்டெழுந்து என்னுரை தன்னை துவக்கு முன்னர் சின்னதோர் பழங்கதை ஆம் ரிஷிகள் காலத்து கதை உங்கட்கு உரைப்பேன் என துவக்கினார் .தற்போதைய காஷ்மீர் எனும் பெயர்வரக்காரணமான காஷ்யப முனிவர் ஒரு நாள் புலரியில் விழித்தெழுந்து வழக்கம் போல சிறுவேள்வி செய்ய ஆயத்தமானார் .அதற்காக உடல்சுத்தம் செய்ய விரும்பி காஸ்மீர் ஏரியை கண்டடைந்தார் .காஷ்மீர் ஏரியைக் கண்ட அக்கணத்தில் குளித்திட நல்வாய்ப்பு குதிர்ந்தது என்று களிப்புடன் ஆடைகள் களைந்து நீராட விருப்பு கொண்டு நின்றார். களைந்த ஆடையை அருகில் பாறை மேல்,நடக்க போகும் / விளையும் விபரீதம் - அறியாமல் வைத்தவர் முப்புரி நூலினை மும்முறை மாற்றி பின் தொப்பென குதித்தார் நீரில் மூழ்கிட .குளிர் நீர் கொடுத்த களிப்பும் உவகையும் துளிர் விடும் எண்ணம் செயல் வடிவாக்கிட காத்திரம் குளித்தவர் மேலே எழுந்தார். அப்போது பாறை மேல்வைத்த ஆடை காணாமல் திகைத்து நின்றார் .திடுக்கிட்டார் மனம் வெதும்பினார் .ஆடையற்ற கையறுநிலை -யாரோ எடுத்தவர்? கள்வனோ என யோசிக்க பாகிஸ்தானியன் ஒருவன் திருடி இருக்கலாம் என்று அத் திசை நோக்க ,அங்கு இரு பாகிஸ்தானியர்கள் அவர் துணிகளை களவாடி செல்வதை பார்த்தார் இந்தியன் காஷ்யப முனிவர் என்று கூறி வர ,இடை மறித்த பாக் பிரதிநிதி கொதித்து எழுந்தார். நிறுத்துங்கள் உங்கள் பழங்கதையை என்ன பிதற்றல் என்ன உளறல் காஷ்யப முனிவர் எனும் ஹிந்து முனிவர் காலத்தில் பாகிஸ்தானியர்கள் நாங்கள் அங்கு இல்லையே என பதிலுரைத்து தப்பான பேச்சை தயவுடன் நிறுத்தும் என்றார் .உடனே இந்தியபிரதிநிதி இது இது இதுதான் எனக்கு வேண்டும் இப்பொழுது உலகத்துக்கு மிக தெளிவாய் புரிந்து இருக்கும். அப்போது இல்லாத பாகிஸ்தானியர்கள் இப்போது காஷ்மீர் தமதென்று சொல்வது சரியா ? என்றவாறு இருக்கையில் அமர்ந்தார் . ஐ. நா சபை மொத்தக்கூட்டமும் எழுந்து நின்று ஆர்பரித்து கைதட்டி இந்தியாவின் வாதத்தை ஆமோதித்தது. பாகிஸ்தான் வெட்கி தலை குனிந்தது.ஆம் ஐ.நா., மனித உரிமை அமைப்பு மனித உரிமைகள் மீறல் என்ற விஷயத்தை காட்டி காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முயற்சிக்க வேண்டாம் .இப்போது நடப்பது காங்கிரஸ் ஆட்சியல்ல .மோடிஜியின் ஆட்சி .ஆதலால் பதிலடி சுடசுட கிடைப்பது உறுதி .

Rate this:
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
09-ஜூலை-201922:42:26 IST Report Abuse

Selvaraj Chinniahவாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன். ...

Rate this:
blocked user - blocked,மயோட்
09-ஜூலை-201904:17:27 IST Report Abuse

blocked userஐநாவின் இந்த குப்பை அறிக்கை பாக்கிகளை புனிதர்கள் என்று சான்றிதழ் கொடுக்காத குறை ஒன்றுதான்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X