சபரிமலை: சபரி மலை பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம், சபரிமலை அமைந்துள்ள பெரியாறு புலிகள் சரணாலய காடுகளில், ஒலிமாசு ஏற்படுத்துவதாக, கேரள மாநில வனத்துறை, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதாக சொல்லி, சபரிமலையில், இளம் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, அதிக முனைப்பு காட்டியது.
இதனால், கடந்த சீசனில் பக்தர்கள் வருகை குறைந்தது. லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் விஷயத்தில், கம்யூ., அரசு அடக்கி வாசிக்கிறது.
இந்நிலையில், இயற்கை சுற்றுலா தொடர்பாக, மாநில வனத்துறை, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள ஓர் அறிக்கையில், ஐயப்ப பக்தர்களால், காடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் விபரம்: பக்தர்களின் சரண கோஷம், சபரிமலை காடுகளில் ஒலிமாசை ஏற்படுத்துகிறது. ஓராண்டில், 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவதால், வனவிலங்குகளின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
விறகு சேகரிப்பு, தற்காலிக கூடாரம் அமைக்க மரக்கிளைகளை வெட்டுவது, பாலிதீன் குப்பை
போன்றவை, காடுகளுக்கு பாதிப்பை உருவாக்குகின்றன. பக்தர்கள், காடுகள் வழியாக நடக்கும் போது உருவாகும் ஒற்றையடி பாதையால், மண் அரிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி ஓர் அறிக்கையை அனுப்பவில்லை என, வனத்துறை மறுத்து வந்த நிலையில், தற்போது, அதன் நகல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (45)
Reply
Reply
Reply