அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வேலுார் லோக்சபா தேர்தல்
'ஜகா' வாங்கினார் தினகரன்

விருத்தாசலம்: ''வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடாது,'' என, அக்கட்சியின் பொதுச் செயலர், தினகரன் கூறினார்.

வேலூர் , லோக்சபா ,தேர்தல்,தினகரன், ஜகா


கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அ.ம.மு.க., வில் இருந்து நிர்வாகிகள் சிலர், சுயநலத்திற்காக,

வேறு கட்சிகளுக்கு செல்கின்றனர். இதனால், அ.ம.மு.க., விற்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களே எழுச்சியுடன் கட்சியை வளர்ப்பர்.

தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில், அ.ம.மு.க., வை முதலில் பதிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக, நிலையான சின்னத்தை பெற வேண்டும் என, முடிவு செய்துள்ளோம். அதன்பின், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக, நிலையான, புதிய சின்னத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், போட்டியிடப் போவதில்லை.

Advertisement

லோக்சபா தேர்தல் தோல்வியால் தான் போட்டியிட பயம் என, நீங்கள் நினைக்கலாம்; அதுவும் உண்மைதான். தற்போது, வேலுார் தொகுதியில் போட்டியிட்டால், மீண்டும் பரிசு பெட்டி சின்னம் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. அதனால் தான், கட்சியை பதிவு செய்தபின், போட்டி என, உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sentha - London,யுனைடெட் கிங்டம்
11-ஜூலை-201917:22:17 IST Report Abuse

senthaஇவரு கருப்பு பணத்தை காப்பதற்காகவே, கட்சி என்று ஒன்றை வைத்து இருப்பார். அதில் அவரும் அவருடைய குடும்பமும் மட்டும் தான் இருப்பர்.

Rate this:
JMK - Madurai,இந்தியா
10-ஜூலை-201911:45:42 IST Report Abuse

JMKஎவ்வளவு அடிச்சாலும் பயபுள்ள தாங்குறாரு ? இவரு ரொம்ப நல்லவருதான் ?

Rate this:
konanki - Chennai,இந்தியா
09-ஜூலை-201922:30:54 IST Report Abuse

konankiயார் இவர்

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X