ரூ. 30 ஆயிரத்துக்கு சான்று... மனிதாபிமானத்தை கொன்று!| Dinamalar

ரூ. 30 ஆயிரத்துக்கு சான்று... மனிதாபிமானத்தை கொன்று!

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 08, 2019
Share
வீட்டுக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா. 'பர்ச்சேஸ்' சென்றிருந்த மித்ரா, ஏகப்பட்ட பார்சல்களுடன் நுழைந்தாள்.''என்னப்பா, எக்கச்சக்கமா 'பர்ச்சேஸ்' செய்திருக்க போலிருக்கு...'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.''சந்தைக்கு போயிருந்தேன். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி வாங்கிட்டு வந்துட்டேன். இந்த 'வீக்' சமையலுக்கு
 ரூ. 30 ஆயிரத்துக்கு சான்று... மனிதாபிமானத்தை கொன்று!

வீட்டுக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா. 'பர்ச்சேஸ்' சென்றிருந்த மித்ரா, ஏகப்பட்ட பார்சல்களுடன் நுழைந்தாள்.''என்னப்பா, எக்கச்சக்கமா 'பர்ச்சேஸ்' செய்திருக்க போலிருக்கு...'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.''சந்தைக்கு போயிருந்தேன். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி வாங்கிட்டு வந்துட்டேன். இந்த 'வீக்' சமையலுக்கு பிரச்னையே இருக்காது,'' என்றபடி, ''கார்ப்பரேஷன்ல, 'டிரான்ஸ்பர்' உத்தரவு வெளியாகி இருக்காமே. ஒரு தரப்பு குஷியாவும்; இன்னொரு தரப்பு ரொம்ப வருத்தத்துலயும் இருக்காமே,'' என்றாள் மித்ரா.''ஆமாப்பா, 'வாட்ஸ்ஆப்'புல, 'டிரான்ஸ்பர் ஆர்டர்' நகல் வந்துச்சு. இன்ஜி., செக் ஷன்காரங்களை மண்டலம் விட்டு மண்டலம் இட மாறுதல் செஞ்சிருக்காங்க. ஏ.இ.இ., போஸ்டிங்ல எட்டு பேரு இருக்காங்க.ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமா இருக்கறவரையும், எம்.எல்.ஏ.,வுக்கு 'அட்ஜஸ்ட்' செஞ்சு போறவரையும், 'டிஸ்டர்ப்' பண்ணலை. மத்தங்களை துாக்கியடிச்சிருக்காங்க. முக்கியமா, 'லேடி' அதிகாரிகளுக்கு முக்கியமில்லாத 'ஒர்க்' கொடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.''அக்கா, அப்படி அர்த்தமில்லை. மண்டல பொறுப்பு வாங்கிட்டு, வேலை செய்யாம இருந்தாங்க. இப்ப, ஒவ்வொருத்தருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருக்காங்க. வேலை செய்ய வேண்டிய நெருக்கடி வந்துருக்கு. இதுல, 'குப்பை' இன்ஜினியருக்கு மறுபடியும் 'ஜோனல்' பொறுப்பு கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.''அப்படியா...'' என, வாயைப்பிளந்தாள் சித்ரா.''டிரான்ஸ்பர் போடப்போறதா கேள்விப்பட்டதும், ஒரு வருஷம் 'ஜோனல்'ல வேலை பார்த்தாதான், பதவி உயர்வு கெடைக்கும்ங்கிற விதிமுறையை சுட்டிக்காட்டி, வாய்ப்பு கேட்டுருக்காரு. ஆளுங்கட்சிக்காரர் ஆசி இருக்கறதுனாலேயும், 'ஸ்மார்ட் சிட்டி' வேலை சுணங்கி இருக்கறதுனாலேயும், கேட்ட பதவியை கொடுத்திருக்காங்க.''ஏ.இ.,களை ஜோனல் விட்டு ஜோனல் மாத்தியிருக்காங்க. குறிப்பிட்ட வார்டுல கோலாய்ச்சிக்கிட்டு இருந்த, இன்ஜினியருங்க ரொம்பவே 'அப்செட்'. பொறியியல் பிரிவுல புகைச்சல் ஓடிட்டு இருக்கு,''''டவுன் பிளானிங் செக் ஷன்லயும் சில பேரு, இன்னும் பொறுப்பேற்காம இருக்காங்களாமே...''''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். ஆனா, பின்வாங்காம, அடுத்தடுத்து 'லிஸ்ட்' வெளியிட்டு இருக்காங்க. அடுத்த லிஸ்ட் இந்த வாரம் வெளியாகும்னு சொல்றாங்க,'' என, ஆவலோடு கேட்டாள் சித்ரா.''வருவாய் பிரிவு, சுகாதாரப்பிரிவு 'லிஸ்ட்' ரெடியாகிட்டு இருக்குதாம். உதவி வருவாய் அலுவலர்கள், கண்காணிப்பாளர் பட்டியல் முதலில் வெளிவரும்னு சொல்றாங்க. அதுக்கப்புறம், பில் கலெக்டருக்கு 'டிரான்ஸ்பர்' கொடுப்பாங்களாம். கடைசியா, மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்களுக்கு 'ஆர்டர்' கொடுக்கப் போறாங்களாம்...''''அப்ப, இனியாவது நிர்வாகம் 'நிமிர்ந்து' நிற்கும்னு சொல்லு...''''நிர்வாகம் சிறப்பா நடக்கணும்; மக்களுக்கு தேவையான வசதிகளை செஞ்சு கொடுக்கணும். 'ஒர்க்' வேகமா நடக்கணும்னு, கமிஷனரும், டெபுடி கமிஷனரும் நெனைக்கிறாங்க. நல்லது நடந்தா, நம்மூரு தானே வளர்ச்சி அடையும்,'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது கரெக்ட்டுதான், மித்து, ஊருக்கு நல்லது செஞ்சா பாராட்ட தயங்கக்கூடாது. கார்ப்பரேஷன்ல நிர்வாகத்தை சீரமைக்கிற வேலையில ஈடுபட்டுட்டு இருக்காங்க. கபாலியோட ஆட்டம், இனிதான் ஆரம்பமாகப் போகுதுன்னு, கார்ப்பரேஷன் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''''ஆனா, கலெக்டர் ஆபீஸ் வளாகமே தண்ணீ இல்லாம, நாறிக்கெடக்குதாமே...'' என, நோண்டினாள் சித்ரா.''ஆமாக்கா, புதுசா கலெக்டர் ஆபீஸ் கட்டுனதும் பழைய கட்டடத்தை கண்டுக்காம விட்டுட்டாங்க. பெண் ஊழியர்களுக்கு உணவருந்தும் அறை, கழிப்பறை வசதி இருக்கு. ஆனா, தண்ணீ வராது; துர்நாற்றம் வீசுது. சாப்பாட்டு பாத்திரம் கழுவக்கூட முடியாம அவதிப்படுறாங்க. கலெக்டர் ஆபீசுக்கு வர்ற பொதுஜனங்க குடிக்கிறதுக்கும் தண்ணீ வசதி செஞ்சு கொடுக்கணும். உயரதிகாரிங்க கண்டுக்க மாட்டேங்கிறாங்கன்னு பெண் ஊழியருங்க, புலம்பிக்கிட்டு இருக்காங்க.''தண்ணீ வினியோகத்தை பொதுப்பணித்துறைக்காரங்க பராமரிக்கணும். விசாரிச்சா, ரெண்டாவது மாடியில இருக்கற ஆபீஸ்காரங்க, கீழே இருக்குற தளங்களுக்கு போற தண்ணி கனெக்ஷனை 'கட்' பண்ணி வெச்சுருக்கறதா, சொல்றாங்க. ஊர் பிரச்னையை தீர்த்து வைக்கிற கலெக்டர், தன்னோட ஆபீசுக்குள்ள இருக்கற பிரச்னையை தீர்த்து வைச்சா பரவாயில்லை,'' என்றாள் மித்ரா.அதற்கு மித்ரா, ''கலெக்டர் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கற ஆபீசுல, ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்கறதுக்கு, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்குறாங்களாமே...'' என, இழுத்தாள்.''என்ன மித்து, உண்மையா?'' என, வாயை பிளந்தாள் சித்ரா.''ஆமாக்கா, நான் சொல்றது உண்மைதான், 'பர்த் - டெத் சர்ட்டிபிகேட்' கொடுக்கறதுக்குதான், அவ்ளோ தொகை கேக்குறாங்க,'' என்றாள் மித்ரா.''பர்த் - டெத் சர்ட்டிபிகேட் கொடுக்குறது, சுகாதாரத்துறை வேலை தானே... வருவாய்த்துறைக்காரங்களுக்கு என்ன வேலை,'' என, இழுத்தாள் சித்ரா.''ஒரு வருஷத்துக்கு முந்தைய சர்ட்டிபிகேட் வாங்கணும்னா, இதுக்கு முன்னாடி கோர்ட்டுக்கு போயி, உத்தரவு வாங்கிட்டு வரணும். எளிமைபடுத்துறதுக்காக, கோட்டாட்சியரே கொடுக்கலாம்னு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்திருக்காங்க. ஆனா, கரன்சி எண்ண ஆரம்பிச்சிட்டாங்க,'' என்ற மித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது.''என்ன, தனலிங்கம் எப்படி இருக்கீங்க,'' என்றவாறு, சமையலறைக்குள் நுழைந்தாள்.நாளிதழ் ஒன்றில் விளையாட்டு செய்தி படித்த சித்ரா, ''நம்மூர்ல உள்விளையாட்டு அரங்கம் கட்டப்போறாங்களாமே,'' என கேட்டாள்.''ஆமாக்கா, 2011ல அப்போதைய முதல்வர் ஜெ., அறிவிச்சு நிதி ஒதுக்கி இருக்காங்க. ஒருத்தரு, கேஸ் போட்டதுனால, நின்னு போயிருந்துச்சு. வழக்கு முடிஞ்சதுனால, அந்த பைலை துாசு தட்ட ஆரம்பிச்சிருக்காங்க. சட்டசபையிலயும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளிச்சிருக்காரு,'' என்றாள் மித்ரா.''அப்படியா... கார்ப்பரேஷன் இடத்துல தனியா கட்டுறதா, சொன்னாங்களே...''''ஆமாக்கா, அதே திட்டம்தான். வ.உ.சி., பூங்காவுக்குள்ள இடம் ஒதுக்கியிருக்காங்க. அரசாணை வெளியிட்டா போதும்; வேலை ஆரம்பிச்சிடும்னு சொல்றாங்க,''''நம்மூருக்கு போலீஸ் டி.ஜி.பி., வந்துட்டு போயிருக்காரு. அதைப்பத்தி, ஏதும் சொல்லலையே...'' நோண்டி விட்டாள் சித்ரா.''டி.ஜி.பி., வந்தது, வழக்கமான 'விசிட்'தான். நம்மூர்ல உளவுத்துறை உதவி கமிஷனரா இருந்த சவுந்தர்ராஜன், போன மாசம் 'ரிடையர்' ஆகிட்டாரு. இன்னும் யாரையும் நியமிக்காம இருக்காங்க...'' என்றாள் மித்ரா.''முக்கியமான பொறுப்பாச்சே... ஏன்... 'லேட்' பண்ணிட்டு இருக்காங்க...''''அந்த இடத்துக்கு பலரது பெயர் அடிபட்டுட்டு இருக்கு. குறிப்பா, கோவையில இருந்து தேர்தல் நேரத்துல திருப்பூருக்கு மாத்துன உதவி கமிஷனர், திரும்பி வருவாருனு பேசிக்கிறாங்க. அவருக்கோ, இந்த இடத்துக்கு வர விருப்பம் இல்லையாம். ஆளுங்கட்சி தரப்புல, அவரை கொண்டு வரலாமுன்னு இருக்காங்களாம்.''ரெண்டாவது சாய்சா, கோவையில ரொம்ப வருஷம் பணியாற்றி, திருநெல்வேலி பக்கம் இருக்குற உதவி கமிஷனர் ஒருத்தரு பெயர் போலீஸ் வட்டாரத்துல அடிபடுது. இவுங்க இல்லாம, மூணு பேர் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.''யாரா இருந்தாலும் அரசியல் பின்புலத்தை விட... கோவையோட 'சூட்டை' தெரிஞ்சவரா இருந்தா நல்லது. உளவு பார்க்குறதுல கோட்டை விட்டுட்டா, அரசே ஆட்டம் கண்டுடும். அதனால, பொறுமையா, 'டீல்' பண்ணிட்டு இருக்காங்க,'' என்றவாறு, முந்திரி பக்கோடா, இஞ்சி டீ கொடுத்தாள் மித்ரா.பக்கோடாவை எடுத்து சாப்பிட்ட சித்ரா, ''அதெல்லாம் சரி, ஆளுங்கட்சி வக்கீல்கள் ரொம்பவே வருத்தத்துல இருக்காங்களாமே...'' என கேட்டாள்.''ஆமாக்கா, கோவை கோர்ட்களில், மத்திய அரசு தொடர்பான வழக்கில் ஆஜராக, ஆளும்கட்சியை சேர்ந்த வக்கீல்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க. ஆனா, காங்., ஆட்சியில நியமிக்கப்பட்ட, தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., வக்கீல்கள், மத்திய அரசு வக்கீலா பொறுப்பு வகிச்சாங்க.''இரண்டாவது முறையா, பா.ஜ., ஆட்சிக்கு வந்தும், ஆளும் கட்சி வக்கீல்களுக்கு பொறுப்பு வழங்கப்படலை. எதிர்க்கட்சி வக்கீல்களே மத்திய அரசு வக்கீலா இருக்காங்க. கட்சிக்காக உழைக்கிறவங்களுக்கு வாய்ப்பு கொடுக்காம; எதிர்க்கட்சிக்காரங்களுக்கு பொறுப்பை தாரை வார்க்கிறதை நெனச்சு, கொதிப்புல இருக்காங்களாம். இது பத்தி, டில்லிக்கு 'கம்ப்ளைன்ட்' போயிருக்காம்,''கரும்புகை கக்கிய பஸ்சுக்கான தகுதிச்சான்றை ரத்து செய்தது தொடர்பான செய்தியை படித்த சித்ரா, ''மித்து, 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாததுனால, எந்த வேலையா இருந்தாலும், 'மேக்கப்' செஞ்சு அனுப்பச் சொல்லியிருக்காங்களாமே...'' என, இழுத்தாள் சித்ரா.''அடடே.... ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. பெரும்பாலான பணிமனையில, 'ஸ்பேர்ட் பார்ட்ஸ்' இல்லையாம். சின்ன சின்ன பிரச்னைனா கண்டுக்காம விட சொல்லி, வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. ஆனா, விபத்து நடந்தா தொழில்நுட்ப பணியாளர்களே பொறுப்பாம்...''''இதெல்லாம்... ஓவரா தெரியலை? பார்ட்ஸ் வாங்கிக் கொடுக்காம, நடவடிக்கை எடுத்தா நல்லாவா இருக்கும்...''''அக்கா, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு லீவு கொடுக்கவே யோசிக்கிறாங்களாம். சொந்தத்துல திருமணம் நடக்குறதுக்கு லீவு கேட்டா, கல்யாண பத்திரிகையை காட்ட சொல்றாங்களாம். துக்கத்துக்கு போகணும்னா கூட, ரத்த சொந்தமா இருந்தா மட்டும் அனுப்புறாங்க. அனுமதியில்லாம, 'லீவு' எடுத்தா 'ஆப்சென்ட்' போட்டு, சம்பளத்தை 'கட்' செய்றாங்களாம்...'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல உணவுத்துறைக்கு ஒரு அதிகாரி நியமிச்சிருக்காங்களாமே...'' என கேட்டாள் சித்ரா.''அவரு, கார்ப்பரேஷன்ல இருந்து, உணவு கலப்பட தடுப்பு பிரிவுக்கு ஓடுனவரு. அங்க கெடுபிடி வந்ததும், கார்ப்பரேஷனுக்கு ஓடி வந்தாரு. முக்கியமானவரின் 'ரெகமன்டேஷன்' இருக்கறதுனால, பசையுள்ள பதவி கொடுத்திருக்காங்க,''''ஆனா, சுகாதாரத்துறை செயல்பாடு ரொம்பவே சுணங்கித்தானே இருக்கு. எங்க பார்த்தாலும், செயற்கை கருத்தரிப்பு மையம் போர்டு தொங்கிக்கிட்டு இருக்கு. ஒழுங்கு இல்லாம போயிக்கிட்டு இருக்கே...'' என அங்கலாய்த்தாள் மித்ரா.''ஆமாப்பா, மாடிப்படிக்கட்டுக்கு கீழே கூட 'லேப்' வச்சு நடத்துறாங்களாம். சில ஆஸ்பத்திரியில டாக்டரே இல்லாம, 'ட்ரீட்மென்ட்' செய்றாங்களாம். தேவைப்பட்டா, சென்னையில இருந்து, டாக்டர்கள் விமானத்துல வந்துட்டு போறாங்களாம். சுகாதாரத்துறை மீது கவனம் செலுத்துனா, ஏகப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கெடைக்கும்னு சொல்றாங்க,'' என்றபடி, டீயை உறிஞ்சினாள் சித்ரா.'டிவி'யை ஆன் செய்த மித்ரா, சட்டசபை நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தாள்.''அனுமதி இல்லாம ஆவின் பெயர்ல நடத்துற டீக்கடையை மூடப்போறதா, சட்டசபையில அமைச்சர் பேசியிருக்காரு தெரியுமா,'' என, கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா, நானும் பார்த்தேன். நம்மூர்ல, அனுமதி இல்லாம செயல்படுற, 16 ஆவின் 'பூத்'களை எடுக்கச் சொல்லி, ஐகோர்ட் ஆர்டர் போட்டிருக்கு. ஆர்டர் நகலை இணைச்சு எடுத்து தரச்சொல்லி, கார்ப்பரேஷன்கிட்ட ஆவின் நிர்வாகம் கேட்டுக்கிட்டு இருக்கு. கார்ப்பரேஷன் தரப்போ, தயக்கம் காட்டிட்டு இருக்கு,'' என்றபடி, துணி காயப்போட மாடிக்குச் சென்றாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X