பதிவு செய்த நாள் :
குமாரசாமி, கர்நாடகா,குழப்பம், ராகுல், காரணம்?

பெங்களூரு: கர்நாடக கூட்டணி அரசில் 13 எம்.எல்.ஏ.க்களின் அதிரடி ராஜினாமாவை தொடர்ந்து உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று பரிசீலனை செய்யவுள்ளார். அவர் எடுக்கும் முடிவில்தான் அடுத்து யார் ஆட்சி அமைக்க கூடும் என்ற நிலை இருப்பதால் சபாநாயகர் 'கிங்மேக்கரா'க உருவெடுத்திருக்கிறார்.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே திடீர் அரசியல் மாற்றமாக இரு கட்சிகளையும் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்தவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சி குறித்து ஆலோசிக்க துணை முதல்வர் பரமேஸ்வரின் பெங்களூரு வீட்டில் காங்கிரஸ் அமைச்சர்கள் கூடினர்.
அதிருப்தியாளர்களுக்கு பதவி கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு வசதியாக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த முடிவுக்கு சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; கட்சியின் நலன் கருதி ராஜினாமா செய்தே ஆக வேண்டுமென பலர் வலியுறுத்தினர். வேறு வழியின்றி காங்கிரசின் துணை முதல்வர் உட்பட 21 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சட்டசபை குழு தலைவர் சித்தராமையா விடம் கடிதம் வழங்கினர்.

இதற்கிடையில் அமைச்சர்களாக பதவியேற்று 25 நாட்களே ஆன சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் நேற்று

தனித்தனியாக கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து தாங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி கடிதம் கொடுத்தனர். அக்கடிதத்தில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தனர். அத்துடன் ஒருவேளை பா.ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் அக்கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகவும் இன்னொரு கடிதத்தை அளித்தனர்.

ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் இவர்கள் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே ஏற்கனவே தங்கியிருக்கும் அதிருப்தியாளர்கள் குழுவுடன் சேர்க்கப்பட்டனர். மாநில அரசியல் நிகழ்வுகள் நிமிடத்துக்கு நிமிடம் மாறியும் பரபரப்பும் அடைந்து வந்த வேளையில் காங். கட்சியில் ஏற்பட்ட நிகழ்வுகள் ம.ஜ.த.விலும் அரங்கேறின. முதல்வர் குமாரசாமியை தவிர

ம.ஜ.த.வின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து குமாரசாமியிடம் நேற்று மாலையில் கடிதம் வழங்கினர்.
இதற்கிடையே மூன்று ம.ஜ.த. - எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர். அவர்கள் தங்கியிருந்த பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சொகுசு பஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது. அவர்கள் பெங்களூரு புறநகரின் தேவனஹள்ளியுள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலனை செய்கிறார். அவரது முடிவைப் பொருத்தே கூட்டணி அரசின் நிலைமை தெரிய வரும்.

இந்நிலையில் கவர்னர் வஜுபாய் வாலா அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் சொலிசிடர் ஜெனரல்

பிரபுலிங்க நாவடகியுடன் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார். சட்ட சிக்கல்கள் குறித்து தகவல் பெற்றார். ஆளும் காங்கிரஸ் ம.ஜ.த.- எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ராஜினாமாவிற்குப் பிறகு எதிர்க்கட்சியான பா.ஜ. வட்டாரம் சுறுசுறுப்படைந்திருக்கிறது. அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டம் முடிந்த பின் மாநில பா.ஜ. பொது செயலர் அரவிந்த லிம்பாவளி கூறுகையில் ''கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. எந்த எம்.எல்.ஏ.வுக்கும் பா.ஜ. தரப்பில் ஆசை வார்த்தை கூறவில்லை. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாளை (இன்று) மாலை 5:00 மணிக்கு பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடக்கும். கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்யவில்லை என்றால் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.

தகுதி நீக்கம் செய்வதில் சிக்கல்:

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் - ம.ஜ.த. தலைவர்கள் ஆலோசித்தனர். கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரல் அசோக் ஹரனஹள்ளி பெங்களூரில் நேற்று கூறுகையில் ''சபாநாயகர் முதலில் ராஜினாமா கடிதங்களை பரிசீலிக்க வேண்டும். வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்தார்களா என்பதை பற்றி மட்டுமே அவர் விசாரிக்க வேண்டும். தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை. ஒரு வேளை தகுதி நீக்கம் செய்யும் பட்சத்தில் நீதிமன்றத்துக்கு சென்று முறையிட்டால் சபாநாயகருக்கு பின்னடைவு ஏற்படும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 64 பிரிவு 'பி' ன் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அமைச்சர்களாக முடியாது'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201904:51:34 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நாட்டிலே என்ன நடந்தாலும் அதுக்கு நேரு, இந்திரா, சோனியா, ராகுல் தான் காரணம். அதுக்கு பயந்து தான் மோடி கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை விட்டு ஓடிட்டாரு..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201904:12:13 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இன்னிக்கி செத்தா நாளைக்கி பாலு.. லட்சம் கோடி கொள்ளையடிச்சா ஆயாம்மா.. அது மணல்லே அனாதையா புதைஞ்சி கெடக்கு.. பக்கத்திலேயே இன்னொரு சடலம்.. கூட இருந்து கொள்ளையடிச்ச சதிகலா களி தின்னு காலம் தள்ளுறாப்புலே.. துனியா மாங்கே க்யூன் மாங்கே காடி கப்படா கோட்டி.. ஏக் பலங் மே சோனா ஹை, கானா ஹை தோ ரோட்டி.. (அங்கங்கே ஹ, ஹி, ஹோ சேத்துக்குங்க).. அதாவது தேவை ரெண்டு கவளம் சோறு, களைச்சு தூங்க ஒரு பாய் மட்டும் தான்.. எதுக்குடா இம்புட்டு சொத்து, காரு, பங்களா, ன்னு ஊரை உலையிலே அடிச்சி மக்கள் வயித்திலே அடிச்சி ... என்னத்தைடா பாக்க போறீங்க..

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
09-ஜூலை-201920:07:49 IST Report Abuse

RajanRajanTOO MANY COOKS SPOILED THE FOOD OF KARNATAKA. இது தான் நம் ஜனநாயகத்தில் கூட்டாட்சி தத்துவத்தின் நிலை. ஆனால் இந்த தத்துவம் தான் நம் சுடலை & கோ வுக்கு பிடித்தது. எனவே நல்லது கெட்டதுகளை மக்கள் தான் புரிந்து செயல் பட வேண்டும். இவிங்க பொழைப்பே மத்தவங்களை தாளிச்சே துன்னு கிட்டு போயிட்டே இருப்பானுங்க.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X