அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நீட்' தேர்வு மசோதா நிராகரிப்பு
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சென்னை: ''நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

'நீட்' தேர்வு மசோதா நிராகரிப்பு; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: 'மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுத் தாருங்கள்' என சட்டசபை வழியே கேட்டபோது மத்திய அரசு மவுனம் சாதித்தது. பா.ஜ. அரசு தற்போது உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. தமிழக மக்களின் ஆழமான உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறி விட்டது. எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கூடிய இரண்டு மசோதாவிற்கும் உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டசபையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை சிறுமைப்படுத்திய பா.ஜ. அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டப்பூர்வமாக ஒப்புதல் பெற தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

சட்டசபை காங். தலைவர் ராமசாமி: மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்க வேண்டும். கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்து அதற்கு சட்ட பாதுகாப்பை ஜெயலலிதா பெற்று தந்தார். அடுத்து 2010ல் தி.மு.க. ஆட்சி இருந்தது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது இந்திய மருத்துவ கழகம் 'நீட்' நுழைவுத் தேர்வை அரசிதழில் வெளியிட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் விலக்கு பெற்று தந்தார். அதன்பின் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அந்த சீராய்வு மனுவை தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்து அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை அமல்படுத்த உத்தரவிட்டார். அதன்பின் ஜெ. முயற்சியில் தமிழகத்திற்கு மட்டும் ஓராண்டு விலக்கு கிடைத்தது. நிரந்தர விலக்கு கோரி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். அதற்கு ஒப்புதல் பெறவிருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி பொதுநல வழக்கில் ஆஜராகி நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த உத்தரவு பெற்றார். எனவே இந்த விவகாரத்தில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இங்கு பேசுகின்றனர் என்று தெரியவில்லை.

ஸ்டாலின்: தி.மு.க. ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வை ஏற்கவில்லை. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை ஏற்கவில்லை. பிரதமராக வந்த பின் அவரே மூலக்காரணமாக இருக்கிறார். எனவே அனைவரும் ஒன்றுசேர்ந்து இதை கண்டிக்கும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது காங்கிரஸ் அரசு நீட் தேர்வை எடுத்து வந்தது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்துகிறது. அனைத்து மாநிலங்களும் ஏற்று விட்டன. தமிழகம் மட்டுமே போராடி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. தன் கொள்கையிலிருந்து விலகவில்லை.

Advertisement

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: மத்திய அரசை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற முடியாது. சீராய்வு மனு போடுவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.

ஸ்டாலின்: கண்டன தீர்மானம் போட முடியாது என்பதை ஏற்கிறேன். வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வருமா?

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: நாம் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் அனுப்பியிருந்தது. ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்று கேட்டதற்கு இதுவரை பதில் வரவில்லை. அதேபோல தமிழக மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசிடமிருந்து நமக்கு தகவல் வரவில்லை. நிராகரிப்பதாக இருந்தாலும் காரணம் வேண்டும்; அதை கேட்போம். காரணம் அறிந்து அதை களைந்து மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம்.

முதல்வர்: சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டாலின்: இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201919:09:24 IST Report Abuse

Rajagopalநீட் தேர்வை எதிர்க்கும் அரசியல்வாதிகள் அனைவரும் கட்டாயமாக அரசாங்க மருத்துவ மனைகளில்தான் சிகிச்சைப் பெற வேண்டும் என்று விதிக்க வேண்டும். எவரும் வெளிநாட்டுக்கு மருத்துவ ரீதியாக செல்லக்கூடாது. அப்போது பார்க்கலாம் எத்தனை இந்த அரசியல்வாந்திகள் தமிழக அரசு மருத்துவர்களை. சீமான் வாயை விடுகிறார். அவர் யாரிடம் செல்கிறார் என்று நேரம் வரும்போதுப் பார்ப்போம்.

Rate this:
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201923:50:20 IST Report Abuse

Mahaஎன்ன சொல்ல வருகிறீர்கள் ? யார் நீட் எழுதி டாக்டர் ஆனார்கள் - அரசு மருத்துவரை ? தனியார் அரசு மருத்துவரை ? ...

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201918:23:17 IST Report Abuse

Sriram VDhirudargal munnetra kalagam might have taken money from Private medical colleges, hence making huge noises. There are lot of issues which requires immediate attention as opposition parties. Non performance of government staffs at district/village level, why dmk is not protesting against them

Rate this:
konanki - Chennai,இந்தியா
09-ஜூலை-201913:56:22 IST Report Abuse

konankiஇதில் அரசியல் செய்தது போதும் .மாணவர்களை ஒழுங்கா படிக்க விடுங்கள்

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X