பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மத்திய அரசில் புதிதாக
3.81 லட்சம் பணியிடங்கள்

புதுடில்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், மத்திய அரசு துறைகளில், 3.81 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் புதிதாக 3.81 லட்சம் பணியிடங்கள்


'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், லோக்சபா தேர்தலின் போது,

பிரசாரம் செய்தன. இந்நிலையில், கடந்த, இரண்டு ஆண்டுகளில், 3.81 லட்சம் புதிய பணிஇடங்கள் உருவாக்கப்பட்டுள்ள தகவல், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2017 மார்ச், 1 நிலவரப்படி, நாடு முழுவதும், மத்திய அரசு துறைகளில், 32 லட்சத்து, 38 ஆயிரத்து, 397 பேர் பணியில் இருந்தனர். இது, 2019 மார்ச் 1 நிலவரப்படி, 36 லட்சத்து, 19 ஆயிரத்து, 596 ஆக உள்ளது. இரண்டு ஆண்டுகளில், 3 லட்சத்து, 81 ஆயிரத்து, 199 புதிய பணியிடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

ரயில்வே அமைச்சகத்தில், மிகவும் அதிகபட்சமாக, 98 ஆயிரத்து, 999 பணியிடங்கள்

Advertisement

உருவாக்கப் பட்டுள்ளன. 12.7 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கை, 13.69 லட்சமாக உயர்ந்து உள்ளது. காவல் துறையில், 80 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மறைமுக வரிகள் துறையில், 53 ஆயிரம்; நேரடி வரிகள் துறையில், 29 ஆயிரத்து, 935; ராணுவத்தில், 53 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-ஜூலை-201916:13:42 IST Report Abuse

Lion Drsekarதகுதி, திறமை,நாட்டுப்பற்று மனித நேயத்துடன் நடந்து கொள்பவர்களை வேலைக்கு வைத்தால் நாடு விளங்கும், வந்தே மாதரம்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-ஜூலை-201908:16:05 IST Report Abuse

ஆரூர் ரங்நமது நாட்டுக்கல்வி மாணவர்களிடையே மனோ தைரியத்தையும் சுயதொழில் செய்யும் மனப்பான்மையையும் கெடுக்கிறது .பாரம்பரியமாக வணிகம் செய்யும் வீட்டுப்பிள்ளைகள் கூட மாதசம்பளவேலைக்கே ஆசைப்படும் நிலைமை.சுயதொழில் செய்வது அவ்வளவு கவுரவக்குறைவா? இதனை சரிசெய்யாவிடில் வேலையின்மை அதிகரிக்கத்தான் செய்யும்

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
09-ஜூலை-201907:46:28 IST Report Abuse

K.   Shanmugasundararaj2016 ல் 412752 காலி இடங்கள் மத்திய அரசு பணிகளில் இருந்தன. ஆனால் 2018 ல் அந்த காலி இடங்கள் 683823 ஆக உயர்ந்து விட்டது . அதாவது இரண்டே ஆண்டுகளில் 65 % உயர்ந்து விட்டது.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X