எட்டு பவுன் கொடு; இல்லாட்டி ஏழரைதான்..!| Dinamalar

'எட்டு பவுன் கொடு; இல்லாட்டி ஏழரைதான்..!'

Added : ஜூலை 09, 2019
Share
த்ரா, தனது அறையில், 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவல் படித்து கொண்டிருந்தாள். 'சைலன்ட் மோடில்' இருந்த அவளது மொபைல் போன் அதிரவே, எடுத்து பேசினாள். ''ம்... அக்கா, சொல்லுங்க!'' என்றதும், ''மித்து, ரெடியாயிரு. நான் வந்ததும் ஒரு பக்கம் போகோணும்,'' சித்ரா கூறியதும், ''வாங்க... போலாம். அஞ்சு நிமிஷத்தில் ரெடியாயிடறேன்,' என்றாள்.சொன்ன மாதிரி சித்ரா வரவே, காத்திருந்த
 'எட்டு பவுன் கொடு; இல்லாட்டி ஏழரைதான்..!'

த்ரா, தனது அறையில், 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவல் படித்து கொண்டிருந்தாள். 'சைலன்ட் மோடில்' இருந்த அவளது மொபைல் போன் அதிரவே, எடுத்து பேசினாள். ''ம்... அக்கா, சொல்லுங்க!'' என்றதும், ''மித்து, ரெடியாயிரு. நான் வந்ததும் ஒரு பக்கம் போகோணும்,'' சித்ரா கூறியதும், ''வாங்க... போலாம். அஞ்சு நிமிஷத்தில் ரெடியாயிடறேன்,' என்றாள்.சொன்ன மாதிரி சித்ரா வரவே, காத்திருந்த மித்ராவும் இணைந்து கொள்ள வண்டி, காங்கயம் ரோட்டில் விரைந்தது. ரோட்டோரம், தி.மு.க., போஸ்டர் கண்ணில்பட, அதை பார்த்து கொண்டே, ''ஏண்டி.. மித்து. கட்சி தலைமை சொன்னதால, பதவியை துறந்தவருக்கு, என்ன பதவி கொடுத்தாங்க''''அக்கா... அதையே ஏன் கேக்கறீங்க? தி.மு.க., தலைவரின் மகனுக்காக தன் பதவியை தாரை வார்த்த 'தகப்பன் சாமிக்கு' ராஜ்யசபா 'சீட்' தருகிறோம்னு ஒரு பேச்சு இருந்துதாம். ஆனால், வழக்கம்போல் 'அல்வா' கொடுத்திட்டாங்களாம்,''''சரி, கிடைக்கறதை வச்சு, திருப்தி அடைஞ்சிக்க வேண்டியதுதானே,'' என்ற சித்ரா, ''அரசு பஸ் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக ஒரு பேச்சு ஓடுதே தெரியுமா, மித்து?'' என்றாள்.''பஸ்களை விட அரசு போக்குவரத்து கழகத்துல பிரச்னைகள்தான் வரிசை கட்டி ஓடுதே. அப்படி என்னக்கா பிரச்னை?''''அரசு பஸ்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சலுகை விலையில் உணவு, குடும்பத்தாருக்கு குறிப்பிட்ட துாரம் வரை இலவச பயணம் என்ற சலுகைகள் உண்டு. இந்த சலுகையை பயன்படுத்தி உயரதிகாரிகளும் கேண்டீனில் சாப்பிடுகிறார்களாம். இதுதவிர, குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச பயண சலுகைகளையும், மறக்காம வாங்கிக்கறாங்களாம்.''''அரசு நிதியில்தான் 'மேட்டர்' ஓட்டறாங்கன்னு பார்த்தா, இப்போ ஊழியர்களுக்கு வரும் சலுகையிலும் கை வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா,'' எனக்கூறி, தலையில் அடித்து கொண்டாள் சித்ரா.வண்டி சீரான வேகத்தில், போய் கொண்டிருக்க, ''அக்கா... எங்கதான் போறோமுன்னு சொல்லுங்க,'' என்றதும், ''கம்முனு உட்கார்ந்திட்டு வா. இடம் வந்ததும், நீயே தெரிஞ்சுக்குவ,'' என்றாள் சித்ரா.அப்போது, குமரன் ரோட்டில் புதிதாக முளைத்திருந்த பெட்டிக்கடையை பார்த்த, மித்ரா, ''என்னக்கா, இப்படி பண்றாங்க.''''அதுதான்டி எனக்கும் தெரியலை. ஸ்டேஷன் பக்கத்துல ஆவின் டீக்கடை வைக்கறதுக்கு அனுமதியில்லைனு சொன்னாங்க. ஏற்கனவே ஒரு கடை இருக்குற போது, 'பொலிடிகல்' பவரை பயன்படுத்தி, இன்னொரு பெட்டியை இறக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''ஏற்கனவே, அந்த ரோடு, என்.எச்., ஆக மாறியதற்கு பின், 'பிளார்ட்பார்ம்' போட்டு, ரோடு குறுகிடுச்சு.இதனால, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரொம்ப வசதியா போச்சு. எல்லா, அதிகாரிகளோட வேலைதான்...'' என்று கடுப்பாக பேசினாள் மித்ரா.ராயபுரம் வழியே இருவரும் சென்ற போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பூங்கா பணிகள் நடந்து கொண்டிருந்தது. பக்கத்திலயே, ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று புதிதாக திறக்கப்பட்டிருந்தது.''ஏன், கார்ப்ரேஷன் இடத்துல, கம்யூ., ஆட்டோ சங்கம் எப்படிடி வந்தது?''''அக்கா... அந்த காலியிடத்தில், உபயோகமான கட்டடம் கட்டுங்கன்னு, மக்கள் எதிர்ப்பு காண்பிச்சாங்க. ஆனா, அதேயிடத்தில், கம்யூ., ஆட்டோ ஸ்டேண்ட் ஆரம்பிச்சிட்டாங்க. இதை தெரிஞ்சிட்ட அதிகாரிகள், ஆரம்பத்தில், 'வாய்ஸ்' கொடுத்தாங்க. யார் சொன்னாங்கன்னு தெரியலை, அன்னைக்கு சாயந்திரமே, 'கப்...சிப்' ஆயிட்டாங்க,''''அட... இது, கூடவா தெரியலை. கம்யூ., எம்.பி., கூப்பிட்டு சொல்லியிருப்பாரு,''''அதுக்குள்ள 'பவரை' காட்ட ஆரம்பிச்சுட்டாங்களே...பலே...!'' சிரித்த மித்ரா, ''அக்கா... இங்க பாருங்க, நொய்யலுக்குள் விளம்பர 'போர்டிங்' வச்சிருக்காங்க,'' என்றாள்.''அந்த கொடுமையை சொல்றேன் கேளு. போர்டு வைக்கறதுக்கு, எந்த கள ஆய்வும் நடத்தாம, அனுமதி கொடுத்துட்டாங்க. போல, நொய்யல் ஆத்துக்குள்ள விளம்பர பேனர் வச்சு, 'கலெக்டர் அனுமதி பெற்ற விளம்பர பலகை'னு வேற எழுதி வச்சிட்டாங்க,''''இனி, கரையில இருந்து, ஆக்கிரமிப்பு செய்ய வழி வகுத்துட்டாங்க. பொதுப்பணித்துறை என்ன 'எதிர்பார்ப்புல' என்.ஓ.சி., கொடுத்துச்சுனு தெரியலை. கலெக்டரும் அனுமதி கொடுத்திட்டாரு. இந்த விவகாரம், பசுமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு,'' என்ற, அப்பகுதியிலுள்ள மண்டபத்துக்குள் சென்று, வண்டியை நிறுத்தினாள்.மண்டபத்தின் வெளியே இருந்த ஸ்பீக்கரில், ''ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள, போன கதை உனக்கு தெரியுமா,'' என்ற பாடல் ஒலித்தது.''ஒரு மேட்டரை சொல்ல வந்தேன். அதற்கேற்ற மாதிரி பாட்டும் பாடுது,'' என்றாள் சித்ரா.''அப்படி எனக்கா... இந்த பாட்டுக்கு நீங்க சொல்ல வர்ற மேட்டர்?''''மித்து, நீ வரவர கற்பூரம் மாதிரி, 'கப்'னு புடிச்சிட்டே. 'வீர'மான, போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில், அதிகாரி ஒருத்தர், மொபைல் போன்களை 'லவட்டறதை' பத்தி போனவாரம் பேசினோம்தானே. இதை தெரிஞ்சிகிட்ட உயரதிகாரி, அவரை, கமிஷனர் ஆபீஸ்க்கு வரச்சொல்லி, 'உங்க மாதிரி ஆட்களால்தான், மேல பதில் சொல்ல வேண்டியிருக்கு,'' என்று 'டோஸ்' விட்டாராம்,''''அப்புறம் என்னாச்சுங்க்கா?'' ஆர்வமாக கேட்டாள் மித்ரா.''மத்தவங்க செய்யாததையா, நான் செஞ்சுட்டேன்,'' என உயதிகாரியை எதிர்த்து பேசினாராம். அதனால, விரைவில் 'டிரான்ஸ்பர்' இருக்கும் ஒரு பேச்சு, உலா வருதுடி,''மண்டபத்துக்குள் சென்ற இருவரும் அமர்ந்தனர். 'சமூக வலைத்தளங்களினால், சீரழியும் பெண்கள்' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது. அதில், 'வாட்ஸ்அப்' 'பேஸ்புக்'கினால், பெண்கள் எப்படி சீரழிக்கப்படுகின்றனர், என்ற உதாரணங்களோடு பேச்சாளர் விளக்கி கொண்டிருந்தார்.அரை மணி நேரம் கழித்து, இருவரும் கிளம்பினர். மழைத்துாறல் ஆரம்பித்தவுடன், கேன்டீனில் ஒதுங்கி, இரு வரும் டீ குடித்தனர். அப்போது, கருத்தரங்கில் பங்கேற்க வி.வி.ஐ.பி., ஒருவர் 'கன்மேன்' சகிதம் வந்திறங்கினார்.அதைப்பார்த்த மித்ரா, ''இவரை பார்த்ததும்தான், கலெக்டர் ஆபீஸ் மேட்டர் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது,'' என்றாள்.''அதென்ன மேட்டர்டி?''''அக்கா, கலெக்டர் ஆபீசில், ஒருவர் 'கன்மேனாக' கடந்த, இரண்டு ஆண்டாக இருந்தார். ரொம்ப காலம் அங்கேயே இருந்ததால், அரசு அதிகாரிகளிடம், 'குளோசா' பழகி, கலெக்டர் ஆபீசுக்கு வர்ற மக்களிடம், 'வைட்டமின் ப'வை கறந்திட்டு, தன்னோட பவரை பயன்படுத்திட்டு இருந்தாராம்,''''இதைப்பத்தி தெரிஞ்சுகிட்ட, கலெக்டர், அந்த 'கன்மேனை' மாத்திட்டாரு. இப்ப மாசத்துக்கு ஒருத்தர் வர மாதிரி பண்ணிட்டாங்க. ஆனா, நம்ம 'கன்மேன்' நேரா போலீஸ் கேன்டீனுக்கு போயிட்டாரு. அங்க 'பீரி டைம்' கிடைக்கிறதை வைச்சு, இன்னமும், கலெக்டர் ஆபீசுடன் 'லிங்க்'கில் இருக்காராம். அதனால, பல ஆபீசர்களை தினமும் தொந்தரவு செய்கிறாராம், '' என்றாள் மித்ரா.''சரி... நாம சொல்லிட்டோம். கமிஷனர்தான் கண்டுக்கணும். அதேபோல், மித்து, லிங்கேஸ்வரர் ஊரில், கணக்கு காட்றதுக்காக, நகைக்கடைக்காரரை 'டார்ச்சர்' பண்றாங்களாம். இதைஎஸ்.பி., தான் கேட்கணும்,'' என்றாள் சித்ரா.''அக்கா... புரியற மாதிரி தெளிவா சொல்லுங்க...!''''பறக்காதடி... சொல்றேன். லிங்கேஸ்வரர் குடி கொண்டுள்ள ஊர் ஸ்டேஷன் கிரைம் அதிகாரி, நகை திருட்டு தொடர்பாக, இலங்கை தமிழரை பிடிச்சிட்டாங்க. அந்நபரை 'ரிமாண்ட்' செய்றதுக்கு, ஆறு வருஷத்துக்கு முன்னாடி, ''திருட்டு நகையை, நீதான் வாங்கியிருக்க'ன்னு, ஒரு நகைக்கடைக்காரருக்கு 'டார்ச்சர்' கொடுத்திருக்காங்க,''''அடக்கடவுளே... அப்புறம், என்ன ஆச்சுக்கா?''''நகை வியாபாரத்தை விட்டு, அவர் நாலஞ்சு வருஷமாச்சாம். அவர்கிட்ட போன கிரைம் போலீசார், அதிகாரி சொல்றபடி, கண்டபடி பேசி, அவரை மிரட்டி, 'இங்க பாரு தம்பி, பேசமா, எட்டு பவுன் குடுத்திடு. இல்லாட்டி, உனக்கு ஏழரைதாண்டி. திருட்டு கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளிடுவேன்னு' சகட்டுமேனிக்கு மிரட்டியிருக்காங்க,''''இதனால, பயந்து போன, நகைக்கடைக்காரர், 'ஆன்லைனில்' பல போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பிட்டாராம். என்ன நடக்குதுன்னு, பொறுத்திருந்து பார்க்கலாம்...!'' என்ற ஆவேசப்பட்டாள் சித்ரா.''அக்கா.... அதே ஊரில் உள்ள காலேஜ் சம்பந்தமா ஒரு மேட்டர்...'' என்ற சித்ரா சொன்னதும், மழை நிற்கவும் சரியாக இருந்தது.ெஹல்மெட் அணிந்தவாறே, வண்டியை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''அதென்னடி மேட்டர்?'' என்றாள், ''யானை வாங்கிட்டு, சங்கிலி வாங்காத கதையா, அந்த காலேஜில், ஸ்டூடண்ட்ஸ் உட்கார 'சீட்' இல்லையாம். இந்த விஷயம் அறிந்த 'சபா' டென்ஷனாகிட்டாராம். அசெம்பிளி நடக்கறப்ப, அதுவும் என் தொகுதி மேட்டர் வெளியே வரக்கூடாதுன்னு சொன்னாராம்,''''ஆனா, ஊரு பூராவும் தெரிஞ்சிடுச்சு. அதில்லாம, காலேஜூக்கு தேவையான தளவாட பொருட்களை வாங்க நிதி ஒதுக்க கோரி, நீலகிரி எம்.பி., ராஜாவை, பொது நல ஆர்வலர்கள் சந்தித்து முறையிட்டது, 'சபா'வுக்கு எக்கச்சக்க 'டென்ஷன்' ஆயிடுச்சாம்,'' என்றாள் மித்ரா.''உண்மைதான்டி, பல கோடி செலவழிச்சு கட்டுன காலேஜில், எல்லா வசதியும் செய்யோணும்தானே,'' என்றவாறே, வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள் சித்ரா. ஹெட்போனை, காதில் மாட்டி, ஹெல்மெட் அணிந்து, உட்கார்ந்திருந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X