பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு
பா.ஜ., - காங்., - மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று நடந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில், 10 சதவீத இடஒதுக்கீடுக்கு, தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட, 16 கட்சிகள் எதிர்ப்பும், பா.ஜ., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட, ஐந்து கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.

10% ,இடஒதுக்கீடு, தலைமை செயலகம், ஆதரவு


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, மருத்துவ படிப்புகளில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்க, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மாலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

அதன் விபரம்:
துணை முதல்வர் பன்னீர்செல்வம்: 69 சதவீத இட ஒதுக்கீட்டை, அ.தி.மு.க., அரசு கட்டிக்காத்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில், குடும்ப ஆண்டு வருவாய், எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளதன் அடிப்படையிலும், குடும்ப சொத்துக்களின் அடிப்படையிலும், இந்த ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொண்டால், கூடுதலாக, 1,000 மருத்துவ இடங்களை தருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான, 150 இடங்கள் போக,

850 இடங்கள், நமக்கு கிடைக்கும். அதில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 586 இடங்கள் கிடைக்கும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இடஒதுக்கீடு என்பது, ஏழ்மையை போக்குவதற்கான கருவி அல்ல. பல நுாற்றாண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், அரசியல் சட்டம் வழங்கிய உரிமை. இந்த உரிமை பறிக்கப்பட, தமிழக அரசு இடமளிக்க கூடாது. மற்ற மாநிலங்களில் இருப்பது போல, 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் அளவுக்கு, முன்னேறிய வகுப்பினர், தமிழகத்தில் இல்லை. எனவே, 10 சதவீத இடஒதுக்கீட்டை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. எனவே, 25 சதவீத கூடுதல், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஆசைப்பட்டு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கக்கூடாது.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: தமிழகத்திற்கு, 1,500 டாக்டர்கள் அதிகமாக கிடைப்பர். எனவே, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.

தமிழக காங்கிரஸ் - கோபண்ணா: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நேரடியாகவோ, மறைமுகமாவே பாதிப்பு ஏற்படாத வகையில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை, தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.

ம.தி.மு.க., - சத்யா: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களை கைதுாக்கி விட, அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும், ம.தி.மு.க., ஆதரிக்கிறது. ஆனால், 10 சதவீத தனி இடஒதுக்கீட்டை, ம.தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர், பாலகிருஷ்ணன்: 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான, எட்டு லட்சம் ரூபாய் உள்ளிட்ட, பொருளாதார வரம்பு என்பது, நலிந்தோருக்கான வரம்பாக இருக்க முடியாது. இதை, தமிழகத்தில் குறைக்க வேண்டும்.

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன்: இந்த, 10 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, கூடுதலாக, 25 சதவீதம் மருத்துவ படிப்பு இடங்களை, மத்திய அரசு வழங்கினாலும், அதனால், முன்னேறிய வகுப்பினருக்கே, அதிக பலன் கிடைக்கும்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன்:இட ஒதுக்கீடு தொடர்பாக, அரசியலைமைப்பு சபையில் விவாதம் நடந்தபோது, பொருளாதாரத்தை அளவுகோலாக நிர்ணயிக்க, பெரும்பாலானோர் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, 10 சதவீதம் இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரானது.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்: பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை சிதைப்பதாகவும் இருக்கும். எனவே, தமிழக அரசு நடைமுறைப்படுத்த கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, பா.ஜ., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், த.மா.கா., புதிய தமிழகம் உட்பட, ஐந்து கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தி.மு.க., - ம.தி.மு.க., - வி.சி., - இந்திய கம்யூ., உட்பட, 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கூட்டம் முடிந்த பின், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், ''ஜெயலலிதா கொள்கையின் படி, 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அரசு நல்ல முடிவு எடுக்கும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
09-ஜூலை-201921:30:14 IST Report Abuse

தமிழ்வேள்இந்த திராவிட திருட்டு கடசிகளின் கண்மூடித்தனமான எதிர்ப்பால் இதுநாள் வரை நடுநிலை வகித்த முற்பட்டோர் தங்கள் நலம் நாடும் இயக்கங்கள் தேசிய கடசிகளில் பகிரங்கமாக ஈடுபடும் நாள் நெருங்குகிறது திராவிட திருட்டு கடசிகள் தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக்கொள்கின்றன

Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
09-ஜூலை-201921:25:40 IST Report Abuse

தமிழ்வேள்இடஒதுக்கீடு என்பது பழங்குடி வனவாசிகள் ராணுவ சேவையில் மரணமடைந்தோரின் மனைவி நேரடி மகன் மகள், மாற்று திறனாளிகள் ஆகியாருக்கு மட்டுமே இருக்கவேண்டும் ஒரு சாதி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிக பிற்பட்ட அல்லது பிற்பட்ட சாதியா என்பதை அந்த பகுதி தலித் மக்களை நிர்ணயிக்க சொல்லவேண்டும் அப்போது தெரியும் இந்த ஆண்ட சாதி மீசை வளைந்த சாதி போன்றவற்றின் லட்சணம் அனைவருக்கும் கல்வி கிடைக்கும்போது தகுதி ஒன்றே அளவுகோலாகவேண்டும் படிக்கவேண்டாம் என்று எவனாவது தடுத்தானா? படிக்கும்போது எதற்கு குடியும் கூத்தாடி சகவாசமும்? இவர்கள் கைகாட்டும் பிராமணன் எவனாவது தண்ணியடித்து ரோட்டில் வேஷ்டி விலகி கிடக்கிறானா? குடித்துவிட்டு பெண்டாட்டியை அடிக்கிறானா? கள்ள உறவு அடிதடி குத்துவெட்டு என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைகிறானா? இவை அனைத்தும் குறைவற நடத்திக்கொண்டிருக்கும் மீசை முறுக்கி அரிவாள் தூக்கி சாதிகளை பிற்பட்டவன் என்று சொன்னால் வாயால் சிரிக்க இயலாது இவர்களது அனைத்து துறைகளிலுமான தோல்விக்கு இவர்களது நடத்தையே காரணம் குடி கள்ளத்தொடர்பு கூத்தாடி தொடர்பு கடசி தொடர்பு போன்றவற்றை அடியோடு ஒழித்தாள் ஒழிய இந்த சோ கால்டு பிற்படுத்தப்பட்டோர் உறுப்படுவதற்கு வழியே கிடையாது சுடலை குருமா போன்று அடுத்தவன் தலையில் மிளகாய் அரைப்பவானை தலைவனாக ஏற்று போஸ்டர் ஒட்டி குவார்ட்டர் மற்றும் பிரியாணிக்கு விலைபோகலாம் அதைத்தவிர வேறெதுவும் இயலாது

Rate this:
oce - tokyo,ஜப்பான்
09-ஜூலை-201920:02:45 IST Report Abuse

oceஉயர் ஜாதி ஏழை பிரிவினரில் பிராம்மணர் மட்டும் இல்லை. மற்ற பிரிவுகளிலும் உயர் ஜாதியினர் உள்ளனர். பத்து விழுக்காடு சலுகை உயர்ஜாதி ஏழையினர் அனைவருக்கும் பொதுவானது. இது எல்லாருக்கும் நன்பை தரும். அதே வேளையில் தாழ்த்தப்பட்ட பரம்பரையினர் சீர் மரபினராகி விட்டனர். இதுகாறும் அளிக்கப்ட்டு வரும் அபரிமிதமான சலுகைகளை மறு ஆய்வு செய்து தேவையற்றதை நீக்க வேண்டும்.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X