இளம்தலைவரை தேடுகிறது காங்.,

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement

புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, இளைஞர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, பரவலாக பேசப்படுகிறது.



latest tamil news



சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., மோசமான தோல்வியை சந்தித்தது. அதையடுத்து, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, ராகுல், 49, அறிவித்தார். 'அவரே தொடர வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், விலகும் முடிவில், ராகுல் உறுதியாக உள்ளார். 'கட்சிக்கு புதியத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, அவர் கூறினார்.

கட்சியின் புதியத் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து தொடர்ந்து பேசப்படுகிறது. பல பெயர்கள் தினமும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கட்சிக்கு, இளைஞர் ஒருவர் தான், தலைவராக வர வேண்டும் என்ற கோஷம் தற்போது ஒலிக்கத் துவங்கியுள்ளது.


latest tamil news



தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, உத்தர பிரதேச பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து, ஜோதிராதித்யா சிந்தியா, 48; மும்பை தலைவர் பொறுப்பில் இருந்து, முன்னாள் மத்திய அமைச்சர், மிலிந்த் தியோரா, 42, விலகினர். அதைத் தொடர்ந்தே, கட்சிக்கு இளைஞர் ஒருவர் தலைவராக வேண்டும் என்ற பேச்சு அதிகரித்துள்ளது. இந்த இருவரைத் தவிர, ராஜஸ்தான் துணை முதல்வர், சச்சின் பைலட்டின், 41, பெயரும் அடிபடுகிறது.

பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங்கும், 'இளைஞர் ஒருவரே கட்சித் தலைவராக வர வேண்டும்' என்று கூறியுள்ளார். இளம் தலைமுறையினரை கவரும் வகையில், அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய இளந்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என, பரவலாக பேசப்படுகிறது.


latest tamil news



''இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல், காங்., காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டி உடனே, அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, மூத்த தலைவர், கரண் சிங் கூறியுள்ளார். யாருக்கு தலைவர் பதவி வாய்ப்பு என்ற பட்டிமன்றம், கட்சியில் நடந்து வருகிறது. விரைவில், இதற்கு முடிவு எட்டப்படும் என, எதிர்பார்க்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
09-ஜூலை-201921:04:34 IST Report Abuse
konanki காங்கிரஸ் இல்லாத பாரதம்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
09-ஜூலை-201921:03:53 IST Report Abuse
konanki இளம் தலைவரோ கிழ தலைவரோ யாராயிருந்தாலும் மணிமேகலை குடும்ப அடிமை தான்.இதுக்கு போய் என்ன இவ்வளவு அலப்பறை
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜூலை-201916:49:05 IST Report Abuse
Endrum Indian ப்ரியங்கா வதேராவின் மகன் (ரவுல் வின்சி இவன் கார்டியன்/ காப்பாளன் என்று பள்ளிக்கூட அப்ப்ளிகேஷனில் எழுதப்பட்டிருக்கின்றது) தான் சிறந்த இளம் தலைவர். என்ன ஆன்டோனியோ ரவுல் வின்சி கான் சொல்வது சரிதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X