பார்லி.,யில் தி.மு.க., வெளிநடப்பு

Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (4)
Advertisement

நீட்' தேர்வு விவகாரத்தையும், வழக்கம்போல, 'ஜீரோ' நேரத்தில் மட்டுமே, தி.மு.க.,வால் கிளப்ப முடிந்தது.

இறுதியில், உரிய பதிலை அளிக்க, மத்திய அரசு தவறியதைக் கண்டித்து, அக்கட்சி, எம்.பி.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர்.லோக்சபாவில் நேற்று, ஜீரோ நேரத்தில், கர்நாடக அரசியல் விவகாரம், பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, பார்லிமென்ட், தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வு பிரச்னையை கிளப்பினார். அதன் விபரம்:நீட் தேர்வு, முழுக்க முழுக்க, மத்திய அரசு கல்வித்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும், கிராமப்புற, ஏழை மற்றும் நடுத்தர பிரிவு மாணவர்களால், நீட் தேர்வில், தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால் மருத்துவ கல்லுாரிகளில், இடமும் கிடைப்பதில்லை.பிளஸ் 2 தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றும், தங்களது மருத்துவ கனவு பறிபோனதால், இதுவரை, எட்டு மாணவியர், தற்கொலை செய்துஉள்ளனர்.நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அந்த தீர்மானங்களை, உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டதாக, மத்திய அரசு, சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கும் வகையில், மத்திய அரசிடமிருந்து, சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு, பாலு பேசினார்.அப்போது சபையில், உள்துறை அமைச்சர், அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத்சிங் என பலரும் இருந்தனர்.பாலுவின் கோரிக்கையை, யாரும் கண்டு கொள்ளாத நிலையில், 'நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்' என கூறி, தி.மு.க., எம்.பி.,க்கள், சபையிலிருந்து வெளியேறினர்.லோக்சபாவில், தி.மு.க., வெளிநடப்பு செய்தபோது, அ.தி.மு.க.,வின் ரவீந்திரநாத், அமைதியாக அமர்ந்திருந்தார்.

- நமது டில்லி நிருபர்- -'

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-ஜூலை-201922:23:05 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தமிழகத்தை பல்லாண்டு ஆண்டு மேதாவிகளாக பெறும் செல்வந்தராக கல்வி நிறுவன தொழிற்சாலை முதல்வராக ஆகி இன்னும் சொத்து சேர்க்க ஆள அவா கொள்ளும் இவர்களின் தீர வீர செயல் வெளி நடப்பை தவிர வேறொன்னும் இல்லை .தானே பெரியவன் தான் மட்டுமே அறிவாளி தான்மட்டுமே வாழனும் என்று வாழ நினைக்கும் இவர்களை பணத்திற்காக அடிமையாகி தேர்வு செய்து விட்டார்கள் விவரம் தெரிந்தவர்கள் கூடென் செய்ய. புருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வாழ வழி செய்ய மையஅரசு நினைப்பதை எதிற்கும் இவர்கள் மட்டும் வாழலாமா சாகும் வரை அரசியலில் கோலோச்சி வாழ எண்ணுவது என்னங்க தர்மம் . தானும் வாழனும் அடுத்தவனும் வாழனும் அதுதான் நியதி நல்லவருக்கு இலக்கணம். அதை விட்டு எதிர்ப்பது நியாமல்ல .உயர் வகுப்பினர் இவர்களை போல்ஒருபோதும் எண்ணமாட்டார்கள் .தன்கடமையை செவ்வனே செய்து அரசுக்கு பாடுபடுவர்.போராட்டம் ஒருபோதும் செய்யார் . கண்டிப்பாக பத்து விழுக்காடு மைய அரசு வழங்கும் எல்லோரும் வாழ நினைப்பதே மைய அரசின் கொள்கை.
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201918:17:39 IST Report Abuse
Sriram V Dhirudargal munnetra kalagam might have taken money from Private medical college lobby. Shame on them
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
09-ஜூலை-201915:25:07 IST Report Abuse
Baskar இவர்களுக்கு தமிழகத்திலும் இதே பிழைப்பு டெல்லியிலும் இதே பிழைப்பு. இது தான் தி.மு.க வின் உயர்ந்த கொள்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X