'ஆடம்பர ஓட்டல் வேண்டாம்': இம்ரான் சிக்கனம்

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், ௬௬, வரும், ௨௧ல், அமெரிக்கா செல்லும் போது, ஆடம்பர ஓட்டல்களில் தங்காமல், பாகிஸ்தான் துாதர் இல்லத்தில் தங்க முடிவெடுத்துள்ளார்.



latest tamil news



அவரின் சிக்கன நடவடிக்கை முடிவு, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.நிதி நெருக்கடிஅண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக, இம்ரான் கான் பொறுப்பேற்றது முதல், பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏகப்பட்ட நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை, காப்பாற்றும் வகையில், சர்வதேச நிதியம், ௪௨ ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.அதற்காக, சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளில், மிக முக்கியமானது, 'அரசு சிக்கன நடவடிக்கைகளை, பின்பற்ற வேண்டும்' என்பது.

இந்நிலையில், ௨௧ல் துவங்கி, மூன்று நாட்களுக்கு, இம்ரான் கான், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், இந்த முறை, சிக்கன நடவடிக்கையாக, அந்நகரில் உள்ள, பாகிஸ்தான் துாதரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்க உள்ளார்.உளவு துறை இது, அவரின் எளிமையை காட்டினாலும், அமெரிக்க உளவுத்துறையினருக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. எந்த நாட்டு பிரதமர், அதிபர், வாஷிங்டன் வந்தாலும், அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை, அமெரிக்க உளவு அமைப்பு தான் மேற்கொள்ளும்.வாஷிங்டன் நகரில், பல நாடுகளின் துாதர்கள், அதிபர் டிரம்பின் நெருங்கிய உறவினர்கள் வசிக்கும் பகுதியில், பாகிஸ்தான் துாதர் இல்லம் உள்ளது.


latest tamil news



அங்கிருந்து இம்ரான் கான், அடிக்கடி வெளியே சென்று வந்தால், வி.வி.ஐ.பி.,கள் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என, உளவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதில், வாஷிங்டனில் உள்ள, 12க்கும் மேற்பட்ட, பிரபல ஓட்டல்களில், ஏதாவது ஒன்றில் இம்ரான் தங்கினால், அவரின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு களை சிறப்பாக, பிறருக்கு பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ள முடியும் என, வாஷிங்டன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பிரதமர் இம்ரானின் சிக்கன முடிவு, நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
09-ஜூலை-201916:56:19 IST Report Abuse
Nallavan Nallavan தீவிரவாதிகள் ஒழிப்பில் பாகிஸ்தானின் உதவி (ஆதரிக்காமல் இருந்தாலே போதுமே) அங்கிள் சாம் -குத் தேவைப்படுகிறது ....... இல்லையென்றால் இம்ரான் வாழ்ந்தாலென்ன, வீழ்ந்தாலென்ன ??
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
09-ஜூலை-201916:52:47 IST Report Abuse
Nallavan Nallavan நீங்களும் ஒத்த (பாகிஸ்தானிய) ரூவா சம்பளம் போதும் -ன்னு சொல்லிப் பார்க்கலாமே ??
Rate this:
Share this comment
Cancel
09-ஜூலை-201912:58:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உலகநாடுகளிடம் பிச்சை எடுத்து அரசாங்கம் நடத்தினாலும் இவர்கள் ஆடம்பரமாக ஆட்டம்போட்டு வந்தார்கள், தற்போது உலக வங்கி இதற்க்கு ஆப்பு வைத்திருக்கிறது. வேறு வழியில்லாமல் தூதரகத்தில் தங்குகிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X