பா.ஜ., காங்., பார்லிமென்ட் கட்சிக்குழு கூட்டம்

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி : பா.ஜ., பார்லிமென்ட் கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்து வருகிறது.







இன்று (ஜூலை 9) காலை துவங்கிய இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் பங்கேற்றுள்ளனர்.


கர்நாடக அரசியல் குழப்பம் :


கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், அடுத்து நடைபெற உள்ள பட்ஜெட் விவாதங்களில் கட்சி எம்.பி.,க்கள் செயல்படவேண்டிய முறைகள், மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறியுள்ளனர்.







காங்., பார்லி., கூட்டம் :


பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா அழைப்பின் பேரில் கூடி விவாதித்து வருகிறது.ஏற்கனவே, காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மற்றும் எம்.பி., சுரேஷ் ஆகியோர் கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நிலவும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், பட்ஜெட் விவாதங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கபடலாம் என்று தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
09-ஜூலை-201912:32:59 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இந்திய வரலாற்றில் எமெர்ஜென்சி இல்லாமலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதில் பாஜக PhD பட்டம் வாங்கிவிட்டது வெட்கக்கேடான விஷயம்
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
10-ஜூலை-201902:24:37 IST Report Abuse
TamilArasanபொலம்பு...இன்னும் பொலம்பு... உன்னை போன்ற இத்தாலிய அடிமைகள்கிட்ட கிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறோம்... உன் இத்தாலிய தலைவர் காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் இருந்து துடைத்தெரியால் போகமாட்டார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X