குப்புற கவிழும் குமாரசாமி அரசு?

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (29)
Advertisement

பெங்களூரு: கர்நாடக அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ராஜினமா விவகாரத்தில் சபாநாயகர் இன்று (ஜூன் 9) முடிவெடுக்க வாய்ப்புள்ளதால், குமாரசாமி அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூருவில் நடக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை 13 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்து விட்டனர். இதனால் ஆட்சிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.








இன்று சபாநாயகர் முடிவு :


காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேர் கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தனர். அது குறித்து கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் இன்று முடிவுசெய்கிறார்.







மும்பை - கோவா ;


10 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 ஜனதா தள எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதம் கொடுத்ததால், கர்நாடக அரசுக்கு நெருக்கடி உருவானது. அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சைகளும் நேற்று ஆதரவை விலக்கிக் கொண்டு பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜினாமா கடிதம் அளித்த 13 பேரில் 10 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் மும்பையில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.







ஆட்சி கவிழுமா?


இப்போது, 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவையும் சேர்த்து பாஜவுக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்கள் தேவை. ஆனால் 13 பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுவிட்டால், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் பலம் 103 ஆகக் குறைந்துவிடும். பெரும்பான்மைக்கு தேவையான 106 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் ஆட்சியும் கவிழ்ந்து விடும்.


பா.ஜ., பெரும்பான்மை :


அதே சமயம், பாஜவின் பலம் 107 ஆக இருப்பதால் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். இது, சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை நோக்கி ஒட்டுமொத்த கர்நாடக அரசியலின் கவனம் திரும்பியுள்ளது.






நேரில் விசாரணை?


ஒருவேளை சபாநாயகர், 13 எம்எல்ஏக்களிடமும் நேரில் விளக்கம் கேட்டு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அமைச்சர் பதவி உண்டு என்பதை உறுதிப்படுத்தி, 13 எம்எல்ஏக்களையும் தங்கள் பக்கம் இழுக்க கர்நாடக அமைச்சரவை நேற்று கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டமும் பெங்களூரில் விதான் சவுதாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்து விட்டனர்.


ஷோபா கோரிக்கை :


அதேசமயம், பா.ஜ., பெரும்பான்மை பலத்தை பெற்றிருப்பதால் கவர்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என பாஜ முன்னாள் அமைச்சர் ஷோபா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-ஜூலை-201904:39:33 IST Report Abuse
meenakshisundaram kumaaru அரசு என்னிக்கு நிமிர்ந்து நின்று அல்லது உட்கார்ந்து இருந்தது இப்போ குப்புற கவிழ்ந்து .ஆரம்ப முதலே அது படுத்துக்கொண்டே தான் இருந்தது ,அப்பப்போ புரண்டு படுத்த அது இப்போ 'கோமா' நிலைக்கு போய்டுச்சு ?
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-ஜூலை-201920:43:38 IST Report Abuse
PANDA PANDI தனி சிறப்பு dr.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
09-ஜூலை-201919:00:31 IST Report Abuse
Ab Cd தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது நடக்காதா?
Rate this:
Share this comment
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
10-ஜூலை-201904:31:10 IST Report Abuse
Kunjumaniசொரியார் பிறந்த மண்ணாச்சே, அந்த மண்ணை கட்டிக்காக்க கூடவே கட்டுமரம் வேறு என்ன நல்லது நடக்க வேண்டும்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X