அதிருப்திகளுக்கு ‛கல்தா: கேட்கிறார் சித்தா| Come back or get ready to be sacked, Siddaramaiah tells rebel MLAs | Dinamalar

அதிருப்திகளுக்கு ‛கல்தா': கேட்கிறார் சித்தா

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (23)
Share
Siddaramaiah, Congress, rebel MLAs, அதிருப்தி எம்.எல்.ஏ., தகுதி நீக்கம், சித்தராமையா

பெங்களூரு: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.


புறக்கணிப்புகர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே திடீர் அரசியல் மாற்றமாக இரு கட்சிகளையும் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக சூழ்நிலை குறித்து, பெங்களூரு சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரும் கலந்து கொள்ளவில்லை.


பா.ஜ., முயற்சிஇந்த கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலத்தில் காங் - மஜத கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு மெஜாரிட்டியை நிரூபிக்க தவறியதால், பா.ஜ., ஆட்சியை விட்டு விலகியது. இதனால், 6வது முறையாக, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறது. அரசை கவிழ்க்க மோடி, அமித்ஷா முயற்சி செய்கின்றனர். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். பிரதமர் உத்தரவுப்படி தான் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க முயற்சி நடக்கிறது. பதவி ஆசை, பண ஆசை காட்டி எம்எல்ஏக்களை வாங்க பாஜ முயற்சி செய்கிறது. அரசியல் சட்டத்திற்கு எதிராக அக்கட்சி செயல்படுகிறது.


latest tamil news

கட்சி முடிவுமாநில அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்காக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் தாங்களாக ராஜினாமா செய்யவில்லை. இதற்கான நடவடிக்கைகள் முறையானதாகவும் இல்லை.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக திரும்பி வந்து தங்களது ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். அவர்கள் அதனை செய்யாத பட்சத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் முறையிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அவர்களின் நடவடிக்கை கட்சி விரோதமானது. பா.ஜ.,வுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


சபாநாயகர் மறுப்புஇந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X