பாத யாத்திரை செல்க: எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (19)
Advertisement
PM,  Modi, BJP Lawmakers,Foot-March,Gandhi Jayanti, பாத யாத்திரை, எம்.பி., பிரதமர், அறிவுரை

புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் பாதயாத்திரை செல்ல வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பா.ஜ., பார்லிமென்டரி குழு கூட்டம் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.






இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ''மஹாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2 முதல் படேல் பிறந்த நாளான அக்.,31க்குள் ஒவ்வொரு எம்.பி.,க்களும் தங்களது தொகுதிகளில் 150 கி.மீ., பாத யாத்திரை செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் 15 கி.மீ., தூரம் நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். இந்த பாத யாத்திரையில் ராஜ்யசபா எம்.பி.,க்களும் பங்கேற்பதுடன், பா.ஜ., பலவீனமாக உள்ள தொகுதிகளுக்கு செல்ல வேண்டும்.






கிராமங்கள் புத்துயிர் பெற்று, தன்னிறைவு பெறும் வகையில் அமைவது, மரம் நடுதல், குறைந்த செலவில் விவசாயம் ஆகியவற்றை கவனம் செலுத்த வேண்டும். பாதயாத்திரையின் போது, தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் செல்வதுடன், மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து விளக்க வேண்டும். வரும் காலங்களில், நமது கொள்கைகள், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையினை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்,'' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
10-ஜூலை-201907:50:59 IST Report Abuse
J.Isaac காந்திஜியை போல் பாதயாத்திரை சென்று , காந்திஜியை கொன்றவனுக்கு மாலை போட்டு மரியாதையை செய்வோம் . மோடி சினிமா வெளிவந்து விட்டதா ? தெரிவித்தால் நல்லது .
Rate this:
Share this comment
Cancel
Achchu - Chennai,இந்தியா
10-ஜூலை-201905:54:53 IST Report Abuse
Achchu பாதயாத்திரையின் போது, தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் செல்வதன் நோக்கம் புரியவில்லை தேர்தல் தவிர மற்ற நாட்களில் ஒட்டு சாவடிகள் இருக்குமா?
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இது ஒரு நல்ல அறிவுரை. எத்தனை பேருக்கு தங்களது தொகுதி வார்டு மெம்பர் முதல் எம்பீக்களை தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் மக்களுக்கு சேவை புரிய வேண்டும். நடப்பதோ வேறு. காசு கொடுத்து எம்பீயாகவோ வார்டு மெம்பராகவோ ஆகிவிட்டால் பின்னர் எப்படி மக்கள் சேவை செய்ய மனம் வரும். மக்களோடு மக்களாக இருந்தால் தான் இந்த நிலை மாறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X