பாத யாத்திரை செல்க: எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை| PM Asks BJP Lawmakers To Take 150-km Foot-March For 150th Gandhi Jayanti | Dinamalar

பாத யாத்திரை செல்க: எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (19)
Share
PM,  Modi, BJP Lawmakers,Foot-March,Gandhi Jayanti, பாத யாத்திரை, எம்.பி., பிரதமர், அறிவுரை

புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் பாதயாத்திரை செல்ல வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பா.ஜ., பார்லிமென்டரி குழு கூட்டம் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.


latest tamil news
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ''மஹாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2 முதல் படேல் பிறந்த நாளான அக்.,31க்குள் ஒவ்வொரு எம்.பி.,க்களும் தங்களது தொகுதிகளில் 150 கி.மீ., பாத யாத்திரை செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் 15 கி.மீ., தூரம் நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். இந்த பாத யாத்திரையில் ராஜ்யசபா எம்.பி.,க்களும் பங்கேற்பதுடன், பா.ஜ., பலவீனமாக உள்ள தொகுதிகளுக்கு செல்ல வேண்டும்.


latest tamil news
கிராமங்கள் புத்துயிர் பெற்று, தன்னிறைவு பெறும் வகையில் அமைவது, மரம் நடுதல், குறைந்த செலவில் விவசாயம் ஆகியவற்றை கவனம் செலுத்த வேண்டும். பாதயாத்திரையின் போது, தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் செல்வதுடன், மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து விளக்க வேண்டும். வரும் காலங்களில், நமது கொள்கைகள், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையினை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்,'' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X