எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வசூல்வேட்டை
மாவட்ட பதிவாளர் இடமாறுதலில்...

பதிவுத்துறையில், 16 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதில், விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

பதிவாளர்,லஞ்சம், இடமாறுதல், வசூல்வேட்டை


மேலும், இதன் பின்னணியில், பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாகவும் புகார் எழுந்துள்ளது. பதிவுத்துறையில், பணியாளர்கள், பதிவாளர்களுக்கான பொது மாறுதல் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில், மாவட்ட பதிவாளர்களுக்கு, எந்த அடிப்படையில் இடமாற்றம் வழங்குவது, புதிய பொறுப்பு வழங்குவது என்பது குறித்து, 1993 ஆக., 16; 2009 ஜூன், 24ம் தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

இந்த இரண்டு அரசாணைகளிலும், மாவட்ட பதிவாளரை, முதலில் நிர்வாக பணியில் நியமிக்க வேண்டும்; அங்கு, மூன்றாண்டுகள் பணி முடித்ததும், பதிவுப்பணிக்கு மாற்ற வேண்டும். பதிவுப்பணியில், குறைந்தபட்சம்

ஓராண்டு அல்லது மூன்றாண்டு பணியாற்றிய பின், முக்கியத்துவம் இல்லாத தணிக்கை பணி, கட்டட ஆய்வுப்பணி, சீட்டுப் பணி ஆகியவற்றுக்கு மாற்ற வேண்டும் என, தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், 16 மாவட்ட பதிவாளர்களை இடம் மாற்றம் செய்து, சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், இடம் பெற்றுள்ள மாவட்ட பதிவாளர்கள், தங்களுக்கு பேசி வைத்து, மேலிடத்தை உரிய முறையில் கவனித்து, விருப்பமான இடங்களை பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, பதிவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது : பதிவுத்துறை நிர்வாகம், எந்த அளவுக்கு ஊழலுக்கு துணை போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த இடமாறுதல் ஆணை உள்ளது. சார் - பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் இடமாறுதலுக்கு, 20 முதல், 80 லட்சம் ரூபாய் வரை கைமாறியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக, மதுரையில் மாவட்ட பதிவாளர் நிலையில், கந்தப்பன், மணிமுருகன், அமீர்ராஜா ஆகிய சார் - பதிவாளர்கள் இடம் மாற்றப்பட்டு உள்ளனர். மூவரும், மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், பதிவு பணியில் இருந்து விட்டனர். தற்போது, மீண்டும் பதிவு பணியில், அதே பகுதியில் உள்ள, வேறு அலுவலகத்துக்கு மாறியுள்ளனர். இதேபோல், ஆறு மாதங்களுக்கு

Advertisement

முன், வில்லிவாக்கத்தில் சார் - பதிவாளர் கோபாலகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கினார்.

இதையடுத்து, கோபாலகிருஷ்ணன், துாத்துக்குடி தணிக்கை பிரிவு, மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டார். ஆனால், அவர் தொடர் விடுமுறை எடுத்து, துாத்துக்குடி செல்வதை தவிர்த்தார்.இந்நிலையில், கோபால கிருஷ்ணன், சென்னை மண்டலத்தில், செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இதன் பின்னணி, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, 16 மாவட்ட பதிவாளர்கள், மாறுதல் அரசாணையை நிறுத்தி வைத்து, இதன் பின்னணி குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்தால், பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் அம்பலத்துக்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
10-ஜூலை-201920:59:25 IST Report Abuse

southindianலஞ்ச புகாரில் சிக்குபவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவேண்டும் . அனால் அவர்களை இட மற்றம் பதவி உயர்வு இது இந்தியாவில் மட்டும் அதுவும் தமிழ்நாட்டில் தான் நடக்கும் அதுபோல் தேச தோரோகிகளையும் பார்லியமென்ட்டுக்கு அனுப்பும் நாடும் நமது தமிழ்நாடு தான் வெட்க கேடு

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
10-ஜூலை-201912:41:23 IST Report Abuse

PANDA PANDIஇப்படி Statement உள்ளபோதும் வருமான வரி லஞ்சம் ஒழிப்பு, ENFORCEMENT, Customs, இப்படி இவர்கள் ஒண்ணுமே செய்யமாட்டார்களா. எதிரியை இருந்தால் மேலிடத்து உத்தரவின் படி RAID நடத்தமட்டும் செய்வீர்கள். என்ன உலகம் இது.

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
10-ஜூலை-201908:44:56 IST Report Abuse

பாமரன்இந்த ஒரு துறையில் மட்டுமே ஆண்களுக்கு நிகராக அல்லது அதற்கும் மேலாக பெண்கள் வேலை செய்யறாங்க... ஒரு ஆண் பதிவாளரிடம் லஞ்ச பிச்சையை கொடுக்காமலோ அல்லது பேரம் பேசி குறைத்தோ சமாளிக்க முடியும்.... ஆனால் பெண் (பேய்) பதிவாளர்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.... லஞ்சப்பிச்சையில் ஒரு பைசா குறைச்சுக்க மாட்டார்கள்... ஆமாம். இந்த துறை, வருவாய் மற்றும் போக்குவரத்து துறைகளில் வேலை செய்பவர்களை பார்த்தாலே பொசபொசன்னு வந்து காலில் உள்ளதை கழட்டி அடிக்க வருது... ஆனாலும் இவனுவ / இவளுவ அசராத ஜென்மங்கள்... இந்த பொழப்புக்கு குடும்பத்தோட ரோட்டில் நின்று.... பிச்சை இல்லை ஆங் அந்த பொழப்பு செய்து வாழலாம்.... (இந்த துறைகளில் இருக்கும் மிக மிக சில நல்ல மனிதர்கள் மன்னிக்கவும்)

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X