கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நெத்தியடி, பொதுநலன், இறையாண்மை, கொடி, நீதிமன்றம், எச்சரிக்கை

சென்னை : 'பொதுநலனுக்கு எதிராக கருத்து பரப்புவோரை மட்டுமின்றி; அவரது பின்னணியையும் விசாரிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று 'நெத்தியடி' உத்தரவு பிறப்பித்துள்ளது.
'பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை துாண்டும் கருத்தை வெளியிட அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை என்பதை தலைவர்களும் பேச்சாளர்களும் மனதில் கொள்ள வேண்டும்' என மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கொடி பிடிப்போருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 'கருத்து சுதந்திரத்தை கவனமாக கையாள வேண்டும்' என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நாகையில் 'மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசிய பேச்சுக்காக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் பேச்சுக்கள் எல்லாம் சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை துாண்டும் விதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எட்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தார்.
மனுக்களில் 'பொதுப் பிரச்னைகள் பற்றி பேசியதற்காகவும் மக்கள் நலன்களுக்கு எதிரான அரசின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும் பொய் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன' என கூறியிருந்தார். அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ''அரசின் திட்டங்கள் கொள்கைகள் குறித்து பொது மக்கள்

மனதில் எதிர்மறையான எண்ணங்களை துாண்டும் வகையில் பேசியுள்ளார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே விரோதத்தை துாண்ட முயற்சிக்கிறார்'' என்றார்.
மேலும் மதம், சமூகம் பெயரில் மக்கள் மத்தியில் பகைமையை துாண்டுவதாகவும் இந்த எட்டு வழக்குகள் தவிர்த்து மேலும் 20 வழக்குகள் திருமுருகன் காந்தி மீது நிலுவையில் உள்ளதாகவும் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை பார்க்கும் போது 'மைக்கை பிடித்தாலே வசைமாரி அவதுாறுகளை பொழியும் எண்ணம் மனுதாரருக்கு இருப்பது தெரிகிறது.
ஜனநாயகத்தின் அடிப்படை சுதந்திரமான பேச்சு என்பது உண்மை தான். சுதந்திரமான கருத்து பரிமாற்றம் தகவல் பகிர்வு வெவ்வேறான கருத்துக்களை விவாதிப்பது இவை எல்லாம் சுதந்திரமான சமூகத்துக்கு அடிப்படையானது தான்.

அதேநேரத்தில் பேச்சு சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளை அரசியலமைப்பு சட்டம் விதித்துள்ளது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது அமைதி உள்ளிட்ட விஷயங்களில் பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பொது மேடை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பேசும் ஒரு தலைவரோ, பேச்சாளரோ பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை துாண்டும் பேச்சை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வெறுப்பை துாண்டும் பேச்சுக்கள் வெவ்வேறு இனம் மற்றும் மத சமூகத்தினர் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி விடும். மதம், இனம், பிறந்த இடம், மொழி, ஜாதி அடிப்படையில் ஒருவரை அவமரியாதையாக பேசும் பேச்சு சட்டப்படி தண்டனைக்குரியது. சுதந்திரமான பேச்சுக்கு இருக்கும் பொறுப்புணர்வை ஒருவர் மறந்து விடக்கூடாது. மனுதாரரின் பேச்சுக்களை பார்க்கும் போது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக

வெறுப்பை துாண்டும் விதத்தில் உள்ளது. தமிழகம் இந்தியாவை சேர்ந்தது அல்ல என்ற ரீதியில் காட்டுவதற்கு திரும்ப திரும்ப முயற்சிக்கிறார்.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். மாநில மக்களின் நலன்களை பாதுகாக்க அமைப்பு நடத்துவதாக மனுதாரர் கூறுகிறார்.அவரது பேச்சுக்களை பார்த்தால் அமைப்பின் நோக்கப்படி இல்லை. அவரது பேச்சுக்கள் வெவ்வேறு மதம் மற்றும் சமூகத்தினருக்கு இடையில் பகைமையை வெறுப்பை வளர்க்கும் விதத்தில் உள்ளது. இத்தகைய பேச்சுக்கள் மாநிலத்தின் நலன்களுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்காது. குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக விஷத்தை கக்குவது அடித்தட்டு மக்கள் உயர்வதற்கு உதவியாக இருக்காது; மாறாக சமூகத்தினர் மத்தியில் வெறுப்பு விதைகளை விதைப்பதாகி விடும்.
முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் உயர்வையும் மக்கள் விரும்புகின்றனர். அதற்கு பங்களிக்கும் விதத்தில் மனுதாரரின் பேச்சு இல்லை. இந்த வழக்குகளில் போலீஸ் நடத்தும் விசாரணையில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. முழுமையான விசாரணையை நடத்தி மனுதாரர் மட்டுமே வெளியில் தெரியும் முகமா; அவரது பின்னணியில் பெரிய வலை உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201901:35:25 IST Report Abuse

TAMILANஊழல் செய்வதைக்கூட அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை என்பதையம் நீதிமன்றம் சுட்டிக்காட்டவேண்டும். மக்களுக்கு நஞ்சு உணவை கொடுக்க எந்த ஒரு மனிதனுக்கும் உரிமையில்லை என்பதையும் அரசாங்கம் உணரவேண்டும். நீதிமான்களும் வளைகுடா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பெட்ரோல் கிடைத்தாலும் அங்கு மக்கள் எப்படிப்பட்ட தண்ணீரை (கெமிக்களால் சுழற்சி செய்யப்பட்ட கடல் நீரையே குடிக்கிறார்கள் )குடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்த நிலைமையை தமிழகத்தில் கொண்டு வந்தது யார் என்பதை தமிழ் மக்களுக்கு புரியும் படி தானாக முன் வந்து ஒரு தீர்ப்பெய் வழங்க வேண்டும்.

Rate this:
Ram - ottawa,கனடா
11-ஜூலை-201900:04:07 IST Report Abuse

RamThese kind of fellows should not allowed to move freely, they issues between upper and lower e people . He should be jailed immediately, same way seeman, mugilan and vaiko kind of people also should be jailed

Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
10-ஜூலை-201919:48:58 IST Report Abuse

Nalam Virumbiஇவரை தேசத்து துரோகி என்று தீர்ப்பளியுங்கள். தி மு க இவருக்கு மாநிலங்கள் அவை சீட் கொடுக்கும்

Rate this:
மேலும் 86 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X