பதிவு செய்த நாள் :
குவிப்பு!
பா.ஜ.,வுக்கு ரூ.915 கோடி நன்கொடை
காங்கிரசுக்கு கிடைத்தது ரூ.55 கோடி

புதுடில்லி : கடந்த இரு நிதி ஆண்டுகளில், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து, பா.ஜ.,வுக்கு, 915 கோடி ரூபாய், நன்கொடையாக கிடைத்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரசுக்கு, 55 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

நன்கொடை, பா.ஜ, காங், நிதி, குவிப்பு,சீர்திருத்த சங்கம்


'ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம்' என்ற அமைப்பு, அரசியல் கட்சிகளின் வருவாய், செலவு ஆகியவற்றை கண்காணித்து, ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், அவ்வப்போது, பல தகவல்களை வெளியிட்டு வருகிறது.

தகவல்


தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து கணக்கு, தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும், செலவு மற்றும் வருவாய் கணக்கு அடிப்படையில், அந்த அமைப்பு, தகவல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2016 - 17மற்றும் 2017 - 18 ஆகிய, இரு நிதியாண்டுகளில், முக்கிய அரசியல்

கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகள் பற்றிய விபரங்களை, அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்கப்பட்ட நன்கொடைகள் மட்டுமே, கணக்கிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: முக்கியமான, ஆறு தேசிய கட்சிகளுக்கு, பல்வேறு நிறுவனங்கள், 1,059 கோடி ரூபாய், நன்கொடையாக கொடுத்துள்ளன.

மத்தியில் ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கு, இந்த இரண்டு ஆண்டுகளில், 915 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது; இது, அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த, ஒட்டு மொத்த நன்கொடையில், 94 சதவீதம். எதிர்க்கட்சியான, காங்கிரசுக்கு, 55 கோடி ரூபாய், நன்கொடையாக கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு, 7 கோடி ரூபாயும், மிக குறைந்த பட்சமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 4 லட்சம் ரூபாயும் கிடைத்து உள்ளது.


கிடைக்கவில்லை


மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சி, இந்த இரண்டு ஆண்டுகளில், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை எதுவும், தங்களுக்கு கிடைக்கவில்லை என, தெரிவித்து உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த, மொத்த நன்கொடையில், 120 கோடி ரூபாய், யாரிடமிருந்து அல்லது எந்த

Advertisement

நிறுவனத்திடமிருந்து கிடைத்தது என்ற தகவல் இல்லை. மேலும், 2.59 கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடை கொடுத்தவர்களின், 'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு, அந்த அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொடுத்தது யார்?

கடந்த, 2016 - 17ம் நிதியாண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் தான், அதிகபட்சமாக, 488 கோடி ரூபாய் நன்கொடை, அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ளது. இரண்டாவதாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில், 49 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், 2017 - 18ல், அதிகபட்சமாக, தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 74 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உள்ளன. இந்த நிறுவனங்களிடமிருந்து, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான், அதிக நன்கொடை பெற்றுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-ஜூலை-201920:39:23 IST Report Abuse

Rafi மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசமாக இருந்தாலும், நன்கொடை என்ற வாசகம் பொதுவாக ஆக்கப்பட்டுள்ளது.

Rate this:
Suri - Chennai,இந்தியா
10-ஜூலை-201918:08:23 IST Report Abuse

Suriஇந்த 915 கோடிகள் கர்நாடக ஆட்சி மாற்றத்திற்கு செலவிட போதுமா? ரெட்டி சகோதரர்கள்..... எடியூரப்பாவிடமுள்ள கோடிகள்...... இவையெல்லாம் போதுமா?

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
10-ஜூலை-201916:47:14 IST Report Abuse

J.Isaacநம் நாட்டிற்கு தேர்தலே தேவையில்லை . நாட்டில் நடக்கிற அயோக்யத்தனத்திற்கும் அட்டூழியத்திற்கும் நீதிமன்றங்களின் வினோதமான தீர்ப்புகளுக்கும் ஆட்சிமுறையில் மாற்றம் வந்தால்தான் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X