அமெரிக்க பார்லி.,யில் ஓட்டெடுப்பு 'கிரீன் கார்டு' வரம்பு இன்று நீக்கம்

Added : ஜூலை 10, 2019
Advertisement
 அமெரிக்க பார்லி.,யில் ஓட்டெடுப்பு 'கிரீன் கார்டு' வரம்பு இன்று நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், 'கிரீன் கார்டு'க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா மீது, அந்நாட்டின் பார்லிமென்டில், இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய, கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம்.இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்கள், 'எச் ௧ பி' விசாவை பெறுகின்றனர். அவர்களில் பலர் நிரந்தரமாக அங்கு குடியேற விரும்பினால் முடிவதில்லை.

காரணம், எச் 1 பிவிசா வைத்திருப்பவர்களில், தகுதியுள்ள, 7 சதவீதம் பேருக்கு தான், விண்ணப்ப தேதியின் அடிப்படையில், கிரீன் கார்டு எனப்படும், 'எச் ஆர் 1044' விசா வழங்கப்படுகிறது.இதனால், லட்சக்கணக்கான இந்திய வல்லுனர்கள், 70 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த, 7 சதவீத உச்ச வரம்பை நீக்க வகை செய்யும் சட்ட மசோதா, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், இன்று ஓட்டெடுப்புக்கு வருகிறது. அங்கு இந்த மசோதா நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா சட்டமாகும் போது, இந்தியர்களுக்கு தற்போது இருக்கும், கிரீன் கார்டு சிக்கல், பெருமளவு தீரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நிச்சயம் நிறைவேறும்பிரதிநிதிகள் சபையின் மொத்த, எம்.பி.,க் களான, 435 பேரில், 290 பேர் ஓட்டளித்தால், மசோதா வெற்றி பெறும். இந்த மசோதாவுக்கு, ஆளும், குடியரசு மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின், 310 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. எனவே, இந்த மசோதா, எந்த சிக்கலும் இன்றி நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்து, செனட் சபைக்கு தீர்மானம் செல்லும். அங்கு, ஆளும் குடியரசு கட்சிக்கு, அதிக பலம் இருப்பதால், எந்த சிக்கலும் இன்றி வெற்றி பெற்றுவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X