அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்எல்ஏக்களை சந்திக்க சிவக்குமாருக்கு 'நோ'

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (25)
Advertisement

மும்பை : கர்நாடகாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, அம்மாநில அமைச்சர் சிவக்குமாருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.







அமைச்சர் சிவக்குமார் :


மும்பையில் ரெனாய்சன்ஸ் என்னும் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் 10 கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக அமைச்சர் சிவக்குமார் இன்று (ஜூலை 10) காலை ஓட்டலுக்கு சென்றார்.






அச்சுறுத்தும் அமைச்சர் :

அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் சிவக்குமார் வருகையால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போலீசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து அங்கு ரிசர்வ் போலீசார் மற்றும் கலவரத்தடுப்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.






அனுமதி மறுப்பு :

இந்த நிலையில், நட்சத்திர ஓட்டலுக்கு வந்த சிவக்குமாருக்கு, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஓட்டல் வரை மட்டுமே சிவக்குமார் செல்லலாம். உள்ளே சென்று எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க கூடாது என்று மும்பை போலீசார் கூறினர்.


ஒன்றாகவே இறப்போம் :

பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், '' கர்நாடக அரசியலில் ஒன்றாகவே பிறந்த நாங்கள், ஒன்றாகவே இறப்போம்,'' என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறினார்.






எதிர்ப்பு :

இந்தநிலையில், மும்பை ஹோட்டல் முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்களும், பா.ஜ., கட்சியினரும் கூடி நின்று, அமைச்சர் சிவக்குமாருக்கு எதிர்ப்பு முழக்கமிட்டனர். அவரை கர்நாடகாவுக்கு திரும்பிச்செல்லுமாறு கோஷம் எழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
10-ஜூலை-201915:51:49 IST Report Abuse
Pannadai Pandian நீ வேணும்னா சாவு…...மத்தவங்கள ஏன் சாவ சொல்ற ??? உன் பின்னாடி யாரும் வரமாட்டாங்க…..
Rate this:
Share this comment
Cancel
SARAVANAN SATHAPPAN - bangalore,இந்தியா
10-ஜூலை-201914:34:11 IST Report Abuse
SARAVANAN SATHAPPAN தேச பக்தர்களின் கட்சி என சொல்லிக்கொள்ளும் கட்சி செய்யும் காரியங்களை பார்த்து நாடே சிரிக்கிறது.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
10-ஜூலை-201914:45:11 IST Report Abuse
Chowkidar NandaIndiaசுதந்திரம் வாங்கிக்கொடுத்த(?) கட்சி செய்யும் தகிடுதத்தங்களை பார்த்து நாடே வெட்கி தலைகுனிகிறதே....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-ஜூலை-201913:44:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X