கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஷமருந்திய நாடகம் ; விசித்திர தண்டனை

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (14)
Advertisement

காரைக்குடி : விஷம் குடித்து தற்கொலை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விசித்திரமான தண்டனை வழங்கியுள்ளது.








விஷமருந்துவதாக வீடியோ :



காரைக்குடியில், கார்த்திகா என்ற பெண் கடந்த மாதம், தான் பணியாற்றும் இடத்தில் பாலியல் தொந்தரவு காரணமாக கணவருடன் தகராறு ஏற்பட்டு தாம் தற்கொலை செய்யப் போவதாக கூறி, விஷம் அருந்தும் வீடியோ காட்சி ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.







மருத்துவமனையில் சிகிச்சை :


இதனைக் கண்ட போலீஸ் எஸ்.ஐ. தினேஷ் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் கார்த்திகா சோப் ஆயில் குடித்து விட்டு நாடகமாடியது பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வீடியோ காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


விசித்திர தண்டனை :



எஸ்.ஐ., தினேஷ் மற்றும் கார்த்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி , '' கார்த்திகா, அரசு மருத்துவமனையில் ஒருமாத காலத்திற்கு தினமும் சென்று அங்கே, தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்தார்.


படிப்பினை :


இந்த விசித்திரமான, வித்தியாசமான தண்டனை, விஷமருந்தியாக நாடகமாடிய பெண்ணுக்கு பாடமாக அமைந்துள்ளது. சமூகத்திற்கும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-ஜூலை-201915:55:23 IST Report Abuse
Endrum Indian மிக மிக சரியான தண்டனை. இப்படியே கற்பழிப்பு செய்தவனுக்கு, கொலை செய்தவனுக்கு , கொள்ளை அடித்தவனுக்கு, தீவிரவாதிகளுக்கு தண்டனை மாற்றம் உடனே செய்யவும் நீதிபதி அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
10-ஜூலை-201914:32:46 IST Report Abuse
bal அதனால் என்ன...அந்த தண்டனையை நிறைவேற்றுவதை எப்படி கண்காணிப்பீர்... நிறைய பேர் கையெழுத்து போடணும் வெளியூர் போக கூடாது என்றெல்லாம் சட்டம் இருந்தாலும் எல்லாவற்றையும் டபாய்கிறார்கள்...இந்த பெண்மணி ஹாஸ்பிடல் ஆளுங்களை கரெக்ட் செய்து வந்தமாதிரி சொல்லவைத்தால் என்ன பண்ண முடியும்....தண்டனைகளும், சட்டமும், நியதியும் உள்ளன ஆனால் அதை நிறைவேற்றுவதில் நிறைய ஓட்டைகள் உள்ளன...
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
10-ஜூலை-201914:12:36 IST Report Abuse
Chowkidar NandaIndia விமானத்தில் கட்சி தலைவருக்கு எதிராக கோஷம் போட்டவரின் தூரத்து உறவாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X